மோர்பி பாலம் புனரமைப்பில் இத்தனை கோடிகள் ஊழலா? – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில், பாலம் புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.12 லட்சத்தை மட்டும் தான் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்து. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி 6 மாதங்களாக நடைப்பெற்று, கடந்த 26ஆம் தேதி திறக்கப்பட்டது. பாலம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது முதல் … Read more

பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!

ஒடிசாவில் மாநிலம் தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராம மக்கள் பாம்பு கடிக்கு பயந்து அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தில் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1,500: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சி … Read more

அரசியல் சாசன அமர்வு விசாரித்த உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நவ.7-ல் தீர்ப்பு

டெல்லி: அரசியல் சாசன அமர்வு விசாரித்த உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  நவ.7-ல் தீர்ப்பு அளிக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 10% இடஒதுக்கீட்டை உயர்சாதியினருக்கு 2019-ம் ஆண்டு அறிவித்தது

பஞ்சாபில் இந்து அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இந்து உரிமை அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவசேனா என்ற பெயரில் இந்து உரிமை அமைப்பை சுதிர்சூரி என்பவர் நடத்தி வந்தார். இந்துத்துவா கொள்கைகளை வலியுறுத்தி அவர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அமிர்தசரஸ் நகரிலுள்ள ஒரு கோயிலின் சிலைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. கோயில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சுதிர் சூரி தலைமையில் சிவசேனா அமைப்பினர் நேற்று போராட்டம் … Read more

இதுதான் காங்கிரஸ் உத்தி: பிரதமர் மோடி பொளேர்!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் … Read more

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தியில் மருத்துவ படிப்பு: மாநில அமைச்சர் தகவல்

டேராடூன்: மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்தி மொழியை ஊக்குவிக்கம் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை (எம்பிபிஎஸ்) இந்தியில் படிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும், … Read more

ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ராஜஸ்தான் மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி – பாஜக மீது முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி நடக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்த வீடியோ பதிவுகளை பார்க்கும் போது நம்நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். இந்த … Read more

பாஜக சீக்ரெட் டீல்: பப்ளிக்கில் போட்டுடைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகினால், சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோரை, வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பதாக, பாஜக பேரம் பேசியதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவும், காங்கிரசும் கணவன் – மனைவி / சகோதரர் – சகோதரி உறவை கொண்டுள்ளன. தேர்தலில் … Read more

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரசின் பழைய தந்திரம்..!

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சியின் பழைய தந்திரம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த முறை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், அடுத்த 25 ஆண்டுகால இமாசல பிரதேச வளர்ச்சி பயணத்தை முடிவு செய்யும் என  தெரிவித்தார். Source link