தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு..!!

டெல்லி: தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று முதல் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனையை தளர்த்த அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

தன்பாலின தம்பதி திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி மனு – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின தம்பதியர் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான சுப்ரியோ சக்கரவர்த்தி மற்றும் அபய் டாங் இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் மற்ற தம்பதிக்கு உள்ள சுதந்திரம், உரிமைகள் தங்களுக்கு இல்லை, எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் … Read more

“இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” – பிரதமர் மோடி அடுக்கிய காரணங்கள்

புதுடெல்லி: அந்நியர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த போர்படைத் தளபதி லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் … Read more

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் பெயரை பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது ரசிகர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். மேலும், அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் … Read more

ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நியூடெல்லி: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், ஒரே பாலின திருமணங்கள், லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், டிரான்ஸ், இன்டர்செக்ஸ் மற்றும் க்யூயர் அல்லது LGBTIQ+ சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையேயான உறவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான மனு தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று (நவம்பர் 25) உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, தங்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட … Read more

திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்டது ஜனவரி முதல் சோலார் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்

*கமிஷனர் உத்தரவு திருமலை : திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்ட உள்ள சோலார் மின் உற்பத்தி மையத்தை ஜனவரி முதல் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கமிஷனர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரேணிகுண்டா மண்டலம் தூக்கிவாக்கத்தில் 26 ஏக்கரில் ₹25 கோடியில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி கிடைக்க உள்ளது. இந்நிலையில், நேற்று சோலார் … Read more

எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு விருது

பெங்களூரு: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தனது முதல் நாவலான‌ ‘கோவேறு கழுதைகள்’ மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார். இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற‌ன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக … Read more

துரோகிகளுக்கு சி.எம் பதவியா? அடிச்சு பேசிய அசோக் கெலாட்… தீராத காங்கிரஸ் சண்டை!

வரும் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸின் எழுச்சி அவசியமானதாக இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இரண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியை தழுவி பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. இந்த சூழலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் நடைபயணம் டிசம்பர் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை அடையவுள்ளது. வெடிக்கும் உட்கட்சி பூசல் இந்த சூழலில் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் … Read more

ராகுல் காந்தி 79வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: 2வது நாளாக பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா பங்கேற்பு

போபால்: நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்தியப்பிரதேச மாநிலத்தில் தனது 79வது நாள் பயணத்தை தொடர்ந்து வருகிறார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடைப்பயணத்தை ராகுல் காந்தி செப்.7ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை அடுத்து அவரது பயணம் நேற்று முன்தினம் மத்தியப்பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை எல்லை நகரமான போர்கான் பகுதியில் ராகுல் காந்தி 79வது நாள் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வெறும் 5 தோப்புக்கரணங்களா? – பீகார் பஞ்சாயத்தின் தீர்ப்பு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்தாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் குற்றங்கள் பதிவாவதால், ’பாலியல் வல்லுறவின் தலைநகரம் இந்தியா’ என்றே அழைக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை நிரூப்பிக்கும் விதமாக 5 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு 5 தோப்புக்கரணங்களை தண்டனையாக வழங்கியுள்ளது பீகாரின் ஒரு கிராம பஞ்சாயத்து. … Read more