கொசு வலை கேட்டு கெஞ்சும் தாவூத் கூட்டாளி; ஜெயில்ல கொசுக்கடி தாங்க முடியலய்யா…! நிராகரித்தது நீதிமன்றம்

மும்பை: சிறையில் கொசு வலை கேட்டு கெஞ்சிய தாவூத் இப்ராகிம் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா, சாகடித்த கொசுக்களை ஆதாரமாக காட்டியும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா. தாவூத் உத்தரவின் பேரில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பெரிய தாதாவான இஜாஸ், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more

குஜராத்தில் அதிக இடங்களில் போட்டி: அசாதுதீன் ஓவைஸி திட்டவட்டம்

ஹைதராபாத்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைஸி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தலில் தமது மஜ்லிஸ் கட்சி போட்டியிடுவது குறித்து ஹைதராபாத்தில் ஓவைஸி அளித்த பேட்டியில் கூறியதாவது: குஜராத்தில் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரத்தை நான் தான் தொடங்கினேன். அதன்பிறகு தான் மற்ற கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கின. ஏற்கெனவே எங்கள் கட்சியினர் குஜராத்தில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நாங்கள் எங்களுக்கு பலமான … Read more

தண்டவாளத்தில் நுழையும் மாடுகள் கிராம தலைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை: வந்தே பாரத் மோதலால் நடவடிக்கை

புதுடெல்லி: கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் தொடர்ந்து மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், கால்நடைகளை தண்டவாளத்தின் அருகே அனுமதிக்கக் கூடாது என்று கிராம தலைவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் காந்திநகர் – மகாராஷ்டிராவின் மும்பை இடையே, கடந்த செப்டம்பர் 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இந்த சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் அக்டோபர் 6, 7ம் தேதிகளில் குஜராத்தில் தண்டவாளத்தில் நுழைந்த … Read more

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது அறிவுஜீவி சிறுவனை 9-ம் வகுப்பில் சேர்க்க அனுமதி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் யஸ்வர்தன் சிங். தற்போது 7-ம் வகுப்பு படிக்கும் இவன் அறிவுஜீவியாக திகழ்கிறான். லண்டனைச் சேர்ந்த ஹார்வர்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பு இவனை உலகின் இளம் வரலாற்று அறிஞர் என கூறுகிறது. இவனது அறிவுத் திறன் அளவு(ஐ.க்யூ) 129 என மதிப்பிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கும், யஸ்வர்தன் பயிற்சி எடுக்கிறான். இவன் கடந்த மாதம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனது குடும்பத்தினருடன் … Read more

8500 பக்க ஆவணங்களை மேளதாளத்துடன் மாட்டு,வண்டியில் கொண்டு சென்ற சமூக ஆர்வலர்

மத்தியப்பிரதேச மாநிலம் Shivpuri மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 8ஆயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. Bairad Nagar பஞ்சாயத்தைச் சேர்ந்த Makhan Dhakad என்ற சமூக ஆர்வலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான விவரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் … Read more

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு

டெல்லி: வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கூறுகையில்; … Read more

இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2: 13.5 ஆண்டு சேவைக்குப்பின் கடலில் விழுந்தது

புதுடெல்லி: இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2, 13.5 ஆண்டுகள் சேவையாற்றியபின், கடந்த மாதம் 30-ம் தேதி அன்று கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின், எல்லைகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உளவு பணிக்காகவும் ரிசாட்-2 என்ற உளவு செயற்கை கோள் உருவாக்கப்பட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிஎஸ்எல்வி-சி 12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 300 … Read more

முக்கிய தலைவர் சுட்டுக்கொலை… பஞ்சாபில் தொடரும் பயங்கரம் – முழு பின்னணி

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலதுசாரி தலைவரான சுதிர் சுரி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் நேற்று (நவ. 4) துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், அப்பகுதி மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.  இந்த கொலை குறித்து பஞ்சாப் காவல் துறை தலைவர் கௌரவ் யாதவ் கூறுகையில்,”அம்ரித்சரில் உள்ள கோபால் கோயில் நிர்வாகத்தை எதிர்த்து சுதிர் போராட்டம் நடத்தி வந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். … Read more

வடமாநிலங்களில் மோசமான நிலையை எட்டிய காற்று மாசு!

டெல்லி: வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது.

புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ரூ.15,000 என்ற வரம்பு தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் … Read more