புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ரூ.15,000 என்ற வரம்பு தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் … Read more

ரூ.3 ஆயிரம் கோடியை சுருட்ட 2 லட்சம் போலி கட்டிட தொழிலாளர்கள் பதிவு: கெஜ்ரிவால் மீது பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் 2 லட்சம் போலி கட்டிட தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடியை ஆம் ஆத்மி அரசு சுருட்டி வருகிறது என பாஜ குற்றம்சாட்டி உள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘டெல்லியில்  ஆம் ஆத்மி அரசால் 2 லட்சம் போலி கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, இந்தியாவின் மிகப்பெரிய ஊழல். கட்டுமான தொழிலாளர்களுக்காக பணியாற்றும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், … Read more

பொது சிவில் சட்டம் தேவையில்லை – மத்திய அரசுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து தனிச்சட்டங்களும் போதுமானது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை இல்லை எனக் குரல்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக்குழுவுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முயற்சியாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் சட்டத்துறைக்கான நிலைக்குழுவால் ‘தனிச்சட்டங்கள் சீர்திருத்தம்’ எனும் பெயரில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அக்டோபர் 10 -ல் கேட்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக அரசும் கருத்து … Read more

தமிழ்நாட்டு பெண்ணுக்கு கர்நாடகாவில் நடந்த சோகம் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: வீட்டிலேயே பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள், தாய் மரணம்

பெங்களூரு: ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் ‘தாய்’ அட்டை இல்லாததால், தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணியை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பினர். வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு பிரசவம் ஆனதில் கஸ்தூரியும், அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டம், பாரதி நகரை சேர்ந்தவர் கஸ்தூரி (30). தமிழகத்தை சேர்ந்த இவரின் கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், தனது … Read more

பணத்தை வழிப்பறி கொடுத்தவர் போல நடித்து சக அலுவலர்களை கண்காணித்த ஐபிஎஸ் அதிகாரி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் பெண் போலீஸ் எஸ்.பி.யாக பணியாற்றுபவர் சாரு நிகம். ஐபிஎஸ் அதிகாரி. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் மாறுவேடத்தில், ஆள் அரவமற்ற சாலைப் பகுதிக்குச் சென்றார். முகக் கவசம், கருப்பு கண்ணாடி, துப்பட்டாவால் தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்ட சாரு நிகம், அங்கிருந்தபடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். அப்போது தன் பெயர் சரிதா சவுகான் என்றும், தன்னிடம் 2 நபர்கள் பணத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியதாக … Read more

தொழிலதிபர் வீடு, ஆபிசில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: ஜார்க்கண்டில் ராணுவம், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த பண மோசடி விவகாரத்தை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. இதன் ஒருபகுதியாக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருங்கிய தொழிலதிபரான அமித் அகர்வாலின் ராஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 இடங்கள், கொல்கத்தாவில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அகர்வாலின் நெருங்கிய நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை … Read more

பெரும் சோகம்..!! … தொண்டைக்குழியில் தாய்ப்பால் சிக்கி 4 மாத குழந்தை பலி….!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆலூர் பகுதியைச் சேர்ந்தவர் அபின். இவரது மனைவி ஷெல்ஜா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 4 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு குழந்தை ஹைசலுக்கு அவரது தாய் ஷெல்ஜா தாய்ப்பால் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தாய் ஷெல்ஜா குழந்தையை எழுப்ப முயன்றார். ஆனால் குழந்தை அசைவின்றி மூச்சுப்பேச்சற்று இருந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர், … Read more

இன்று முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!!

டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டி வருகிறது. 450ஆக காற்று மாசின் அளவு பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசநோய் தொடர்பான உபாதை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். Source link

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் காட்வி

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு  டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால், இம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பில் ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. இக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத்தில் செல்வாக்கு … Read more

ட்விட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம்..?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது ட்விட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள … Read more