#BIG NEWS:- குஜராத் முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி..!!

குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார்..டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவைக்கு ஈடாக ஆம் ஆத்மி கட்சியும் கடந்த ஓராண்டாக … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!

டெல்லியில், காற்று மாசு காரணமாக, அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என, அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்றின் தரம் மாசடைவதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் … Read more

4 நாட்கள் பலத்த மழை: கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. வரும் 7ம் தேதி வரை கேரளாவின் வட மாவட்டங்கள் தவிர ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு உள்பட 10 மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கும், 6ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்பட 9 மாவட்டங்களுக்கும், 7ம் தேதி இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம் … Read more

இப்படி கூட ஒருவர் இருப்பாங்களா..? கார் மேல சாய்ந்து நின்ற சிறுவனை வேகமாக வந்து எட்டி உதைத்த உரிமையாளர்..!!

கேரளா மாநிலத்தில் சாலை ஓரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அங்கு இருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் அங்கிருந்த பொது மக்கள் சிலர் சிறுவனை தாக்கியது தொடர்பாக கேட்டதற்கு … Read more

குஜராத்தில் பாஜகவுக்கு வலுவான நிலை; ஆம் ஆத்மி தரும் தாக்கம் என்ன? – கருத்துக்கணிப்பு தகவல்கள்

புதுடெல்லி: குஜராத்தில் மக்கள் ஆதரவு பாஜகவுக்கே அதிகம் இருப்பது லோக்நிதி – சி.எஸ்.டி.எஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்பதும் தெரியவந்துள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று (நவ.3) வெளியிட்டது. இந்நிலையில், குஜராத்தில் அரசியல் களம் எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பாக லோக்நிதி – வளர்ந்து வரும் … Read more

கர்நாடகாவில் சோகம்..! திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி – தமிழக பெண், இரட்டை குழந்தைகள் பலி!

கர்நாடக மாநிலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை, ஆதார் மற்றும் தாய் சுகாதார அட்டை இல்லை எனக் கூறி அரசு மருத்துவமனை திருப்பி அனுப்பி உள்ளது. வீடு திரும்பிய பிறகு பிரசவம் ஆனதில், கர்ப்பிணி மற்றும் அவரது இரட்டை ஆண் குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் என்ற இடத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண், தனது ஆறு வயது பெண் குழந்தையுடன், … Read more

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 7 மற்றும் 8 தேதிகளில் ரஷ்யா பயணம்..!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 7 மற்றும் 8ம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார். இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் உக்ரைன் போர் நிலவரம் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார். ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி , உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையானது என்று தெரிவித்தார். இருதரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், … Read more

கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் ஜல்லார் காவல் நிலையப் பகுதியில் இன்று காலை கார் மீது பேருந்து ஒன்று மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பெதுல் போலீஸ் எஸ்பி சிம்லா பிரசாத் கூறுகையில், ‘கார் – பேருந்து மோதிய விபத்தில் 11 பயணிகள் பலியாகினர். காரில் வந்தவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். பேருந்தின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

கார்மீது சாய்ந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்த உரிமையாளர் – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் தனது காரின்மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.  கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நவம்பர் 3ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கணேஷ், சாலையோரம் நின்றுகொண்டிருந்த காரின்மீது சாய்ந்து நின்றுள்ளான். அப்போது அங்குவந்த காரின் உரிமையாளர் ஷிஷாத், சிறுவன்மீது கோபம்கொண்டு கணேஷின் இடுப்பின்மீது எட்டி உதைத்துள்ளார். வலிதாங்க முடியாத … Read more

பஞ்சாபில் பயங்கரம்: பட்டப்பகலில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஒரு கோவிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சிவசேனா போராட்டம் நடத்தியது. இந்நிலையில் இன்று அமிர்தசரசில் உள்ள கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு போலீஸ் … Read more