கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் உடல் மகனிடம் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட  தர்மபுரியை சேர்ந்த பத்மாவின் உடல் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம்,  பத்தனம்திட்டாவில்  தர்மபுரி அருகே உள்ள பென்னாகரத்தை சேர்ந்த பத்மா  மற்றும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் சில  மாதங்களுக்கு முன், கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக  எர்ணாகுளத்தை சேர்ந்த போலி மந்திரவாதியான முகம்மது ஷாபி, பத்தனம்திட்டா  மாவட்டம் இலந்தூரை சேர்ந்த நாட்டு வைத்தியர் பகவல் சிங், … Read more

35 துண்டுகளாக வெட்டி கொலை காதலியின் மண்டை ஓடு, தாடை எலும்பு கிடைத்தன: அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை

புதுடெல்லி: டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட லிவ்-இன் காதலியின் மண்டை ஓடு, தாடை எலும்புகள் காட்டில் கிடைத்தன. டெல்லி ஹெ்ராலி பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாமல் வாழ்ந்து வந்த காதலி ஷ்ரத்தாவை காதலன் அப்தாப் 35 துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒருவாரம் கடந்த பிறகும், கொல்லப்பட்ட ஷ்ரத்தாவின் முழு உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய அப்தாப் அவற்றை … Read more

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி 3 நாள் பிரச்சாரம் தொடக்கம்

சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி  குஜராத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களில் அவர் பல்வேறு மாவட்டங்களில் எட்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். நேற்று வலசாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குஜராத்தை குறை கூறியவர்களுக்கு ஆட்சியில் இடம் இல்லை என்று வாக்காளர்களுக்கு வலியுறுத்தி பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். சாலையில் பேரணியாக சென்ற மோடிக்கு மக்கள் பெரும் திரளாக வந்து ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது 13 வயதுசிறுமி ஒருவர் மோடியின் சித்திரத்தை கையில் வைத்திருந்ததை கவனித்த … Read more

சினிமா, ஊடகங்களில் நேதாஜி வரலாறு சிதைக்கப்படுகிறது: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொல்கத்தா: திரைப்படங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சாதனைகள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேதாஜியின் உறவினர்களான சவுமியா சங்கர் போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘‘திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம்  நேதாஜி பற்றி சரிபார்க்கப்படாத தகவல்கள் பரப்பி சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். இதற்காக நேதாஜியின் வாழ்க்கை வரலாறையும், சுதந்திர போராட்ட தியாகிகளின் … Read more

காஷ்மீரில் சண்டை தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் தீவிரவாதி கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்  மாவட்டத்தில் உள்ள செக்கி துாது பகுதியில் தீவிரவாதிகள் மறைந்து உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த போலீசார், பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் சஜத் தந்த்ரே என்ற தீவிரவாதி படுகாயமடைந்தான். அவனை உடனே பிஜிபெகராவில் உள்ள … Read more

பிரபல ராடிசன் புளூ ஓட்டல் உரிமையாளர் அமித் ஜெயின் உயிரிழந்தார்

ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும் தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்  காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார். டெல்லி மான்டவலி காவல் நிலையத்துக்கு ஜெயினின் ஓட்டுனர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இ தையடுத்து போலீசார் அமித் ஜெயினின் உடலை மீட்டனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த போலீசார் இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்று தெரிவித்தனர் Source link

கொரோனாவுக்குப் பிறகு இமாச்சலில் புத்துயிர் பெற்றது சுற்றுலா துறை: பயணிகள் வருகை 3 மடங்கு அதிகரிப்பு

சிம்லா: கொரோனாவுக்கு பிறகு தற்போது இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. 2019ம் ஆண்டு 1.72 கோடி சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், 2020ம் ஆண்டு வெறும் 32.13 லட்சமாக குறைந்தது. கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சுற்றுலா துறை பெரிய அளவில் மாற்றம் பெறவில்லை. கடந்த ஆண்டு … Read more

இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி ரிண்டா சிறுநீரக செயல் இழப்பால் சாவு: பாக். மருத்துவமனையில் முடிந்தது கதை

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, சிறுநீரக செயலிழந்து இறந்து விட்டதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான  ‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் முக்கிய தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா.  இந்தாண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னணியில்  ரிண்டா  இருப்பது … Read more

மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து: தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி – கர்நாடக டிஜிபி..!

மங்களூருவில் ஆட்டோவில் நடந்த வெடி விபத்து தற்செயலானது அல்ல, அது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். நாகுரி என்ற இடத்தில் நேற்று மாலை, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் திடீரென வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர். ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் ஒரு குக்கர் பேட்டரிகளுடன் கண்டெடுக்கப்பட்டதால் தீவிரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துள்ள இச்சம்பவம் … Read more

பாக். டிரோன்கள் மீது பிஎஸ்எப் துப்பாக்கிசூடு

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து வந்த 2 டிரோன்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.  இதுகுறித்து பிஎஸ்எப்(எல்லை பாதுகாப்பு படை) அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாப்பில்  உள்ள எல்லை மாவட்டமான குருதாஸ்பூரில் சர்வதேச எல்லைக்கு அருகில் வானில் பறந்த டிரோன் மீது 96 ரவுண்டுகள் சுடப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதால் டிரோன்  சென்று விட்டது. அதே போல் அமிர்தசரஸ் மாவட்டத்தில்  இருநாடுகளின் எல்லையில் நேற்று ஒரு டிரோன்  பறந்தது. பிஎஸ்எப் வீரர்கள் 10 முறை … Read more