பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார். மர்ம நபர்கள் சுட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயில் ஒன்றில் கடவுள் சிலை குப்பையில் வீசியதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

”ஆதார் இருந்தாதான் பிரசவம்” – கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு நேரந்த துயரம்

ஆதார் அடையாள அட்டை இல்லாததன் காரணமாக பிரசவத்துக்காகச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியதால் அந்த பெண்ணும், அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் வீட்டில் இறந்த துயர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தும்குரு மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற 30 வயது பெண். கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த புதன்கிழமையன்று மாலை மாவட்ட … Read more

குஜராத் தேர்தலில் காங்கிரஸ்… யாரும் தொட முடியாத 149… வரலாறு திரும்புமா?

மும்பை மாகாணம் 1957ல் முதல் தேர்தலை சந்தித்த நிலையில், அதன்பிறகு குஜராத் மாநிலம் தனியாக பிரிந்தது. இதையடுத்து 1962ல் தனக்கென முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே எழுச்சியுடன் இருந்ததால் 154 சட்டமன்ற தொகுதிகளில் 113ல் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஜிவ்ராஜ் நாராயண் மெகதா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1967ல் நடந்த இரண்டாவது தேர்தலில் 168 தொகுதிகளில் 93 என காங்கிரஸ் சற்றே சரிவை சந்தித்தது. அப்போது ஸ்வதந்திரா … Read more

கர்நாடகாவில் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுப்பு: தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

கர்நாடக: கர்நாடக தும்குரு மாவட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை  இல்லாததால் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவமானதில் கஸ்தூரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்  உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைந்திருப்பதாக கர்நாடக சுகாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை: சொல்கிறார் தமிழிசை..!

தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் முறையிட திமுக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவில் திமுக மற்றும் அதனுடன் ஒருமித்த கருத்துகள் கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுகவின் கூட்டணிக் கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், தமிழக … Read more

ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி … Read more

திருப்பதி வருகிறீர்களா.. கவனிங்க; 11 மணி நேரம் மூடப்படும் கோவில்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் தோன்றியது. அதேப்போல் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது. சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது ‘பிளட் மூன்’ (blood moon) என்றும் அழைக்கப்படுகிறது. நிபுணர்கள் கூற்றின்படி நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே … Read more

முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி… குஜராத்தில் முதல் ஆளாக குதித்த கெஜ்ரிவால்!

Gujarat Assembly Elections : 2024 மக்களவை தேர்தலுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அடுத்தாண்டு தொடக்கத்தில்தான் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், ஆனால் வழக்கப்படி அடுத்த மாதமே தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான … Read more

டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

புதுடெல்லி: டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘அபாயம்’ என்ற நிலையில் நீடித்துள்ளது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி … Read more

நகர்புற இயக்கம் 3 நாள் மாநாடு – கொச்சியில் இன்று தொடக்கம்

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சியில் 3 நாள்கள் நடைபெறவுள்ள “இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022” இன்று தொடங்கவுள்ளது. இந்த மாநாட்டினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை (எச்யுஏ) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இதுகுறித்து எச்யுஏ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியா விடுதலை பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் இந்த நகர்ப்புற … Read more