8ம் தேதி சந்திர கிரகணம் திருப்பதி ஏழுமலையானை அரை நாள் பார்க்க முடியாது: அனைத்து தரிசனமும் ரத்து

திருமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் அரைநாள் மூடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8ம் தேதி  சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 12 மணி நேரம்  நடை மூடப்பட உள்ளது. சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 முதல் 6.19 வரை இருக்கும் என்பதால் கோயில் காலை 8.40 மணிக்கு நடை மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். இதனால்  விஐபி தரிசனம், … Read more

லாரியில் சென்ற விமான பாகம் பஸ்சில் மோதியது: டிரைவர், 5 பயணிகள் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழைய விமானங்களை உடைத்து அதன் பாகங்களை ஏலத்தில் விடுவது வழக்கம். பழைய விமானங்களை உடைப்பதற்கு முன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் அதை படிப்பதற்காக பயன்படுத்துவார்கள். இப்படி, பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஏ320 ஏர் பஸ் உடைக்கப்பட்டது. இதன் பாகங்களை ஐதராபாத்தை சேர்ந்த ஜோகீந்தர் சிங் என்பவர் ரூ.75 லட்சத்திற்கு  ஏலத்தில் எடுத்தார். நேற்று முன்தினம் விமானத்தின் சிறகுகள், இன்ஜின், டயர்கள் உள்ளிட்ட பாகங்களை 4 ராட்சத … Read more

குஜராத் மாநிலத்தில் டிச. 1, 5-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் – டிச. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 4.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. முதல்முறையாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டு, முதியோர், … Read more

காஷ்மீர் விவகாரம் பற்றி சீனா-பாக். கூட்டறிக்கை ஒன்றிய அரசு கண்டனம்

புதுடெல்லி:  ‘ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி,’ என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, பாகிஸ்தான் – சீனா வெளியிட்டுள்ள கூட்டறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 2 நாள் பயணமாக சீனா சென்றபோது, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் குறித்து இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரம் … Read more

காஷ்மீரில் ஆப்பிள் விலை 30% சரிவு

புதுடெல்லி: நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீதம் ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள ஆப்பிள் உற்பத்திமூலம் தனிநபர் வருவாயில் 8.2 சதவீத பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆப்பிள் விற்பனை விலை கடந்தாண்டை விட 30 சதவீதம் வரையிலும் சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். இதனை சரிக்கட்ட அரசு தலையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பதினாறு கிலோ எடை கொண்ட ஆப்பிள் … Read more

பிஎப் ஓய்வூதிய தொகையை ரூ.2000 ஆக உயர்த்த மறுப்பு: விளக்கம் கோரும் நாடாளுமன்ற குழு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் மறுத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) பதிவு செய்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி ரூ.2000 வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. ஆனால், நிதியமைச்சகம் இதை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, ஒன்றிய தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள், … Read more

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அரியானா, ஒடிசா மற்றும் பீகாரில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிராவில் அந்தேரி (கிழக்கு), அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர், பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் மற்றும் தெலங்கானாவில் முனுகோடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இவற்றில் பாஜ 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா … Read more

நளினி விடுதலை வழக்கு நவ.11க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து, ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம்’ என … Read more

குஜராத் சட்டசபைக்கு டிச.1, 5ல் தேர்தல்: இரண்டு கட்டமாக நடக்கிறது.! நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

புதுடெல்லி: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் விரைவில் முடிய உள்ளதால், இங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தேர்தல் நடத்தபட்ட உள்ள … Read more

மாட்டிறைச்சி விற்றதாக இருவர் அரைநிர்வாணப்படுத்தி கொடுமை – சட்டீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

மாட்டிறைச்சி விற்றதாக சந்தேகத்தின்பேரில் இருவரின் ஆடைகளை கழற்றி, சாட்டையடி கொடுத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் கூட்டிவந்த கொடுமை சட்டீஸ்கரில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சக்கர்பதா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நர்சிங் தாஸ்(50) மற்றும் ராம்நிவாஸ் மெஹர்(52) என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை மூட்டையை கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த கூட்டத்தினர், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என விசாரித்துள்ளனர். … Read more