ஆந்திராவில் டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப சாவு
அனந்தபூர்: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்காஹொன்னூரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், விவசாய பணிக்காக டிராக்டரில் புறப்பட்டனர். வழியில், எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டரில் விழுந்தது. இதில், கூலி தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 6 பேர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதற்கிடையில், அனந்தபூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு … Read more