சிறையில் மசாஜ் சிகிச்சை | டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாஜக கண்டனம்
புதுடெல்லி: திகார் சிறையில் இருந்துவரும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தியேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதலங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. … Read more