இமாச்சலப்பிரதேச தேர்தல் தேதியுடன் குஜராத் பேரவை தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்?: முன்னாள் தலைமை ஆணையர் கேள்வி

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச தேர்தல் தேதியுடன் குஜராத் பேரவை தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன் என்று முன்னாள் தலைமை ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காதது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார். இமாச்சலம் மற்றும் குஜராத் சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தான் முடிவடைகிறது. ஒரே நேரத்தில் முடிவடையும் சட்டமன்றங்களுக்கு ஏன் ஒரே நேரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்று  எஸ்.ஒய்.குரேஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்திற்கு ஏன் இன்று தேர்தல் அறிவிக்கவில்லை?.. தேர்தல் ஆணையம் சொல்லும் 3 காரணங்கள்!

இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களின் தேர்தல் அட்டவணை பாரம்பரியமாக ஒரே நாளில் அறிவிக்கப்படும் நிலையில், இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் அட்டவணையை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்படவில்லை. குஜராத் தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் (தேதி குறிப்பிடவில்லை) என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருக்கும் நிலையில், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாதது அரசியல் … Read more

குஜராத் பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படாதது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படாதது ஏன் என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடனும் முடிவுக்கு வருகின்றன. பதவிக் காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையும் குஜராத் … Read more

ஞானவாபி மசூதி வழக்கு: ஹிந்து அமைப்புகளின் கோரிக்கை நிராகரிப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிய ஹிந்து அமைப்புகளின் கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கவுரி அம்மன் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களின் உருவங்களை ஆண்டு முழுதும் வழிபட அனுமதி … Read more

இலவசங்கள் அறிவிப்பு வழக்கு: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இம்மனுவை ெதாடர்ந்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்க … Read more

‘வெற்றிக் கொடி கட்டு’ பாணியில் கம்பெனி நடத்தி மோசடி.. நொய்டா கும்பலின் பகீர் பின்னணி

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி 600 – 700 பேரை ஏமாற்றிய இருவரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவில் கடந்த 4 மாதங்களாக அம்பா எண்டர்ப்ரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அதில் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பணம் பறித்துக்கொண்டு ஏமாற்றுவதாக அன்குர் குமார் சிங் என்ற நபர் செக்டார் 20 காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், அன்குர் மற்றும் அவரது நண்பர்கள் 15 பேரிடம் ஈரானில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, … Read more

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளின் எதிர்ப்பு வேட்டையின்போது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீநகரின் பதாமி பக் கண்டோமென்டில் உள்ள சினார் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் ஜூம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து, ஸ்ரீநகர் பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோ.எம்ரான் முசவி கூறுகையில், “இந்திய ராணுவத்தின் ஆத்மார்த்தமான இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சினார் போலீஸ் கமாண்டர் லெப்.ஜெனரல் … Read more

விடிய.. விடிய..இளம்பெண்களுடன் ஆட்டம்; சிக்கிய 18 எம்எல்ஏ, அமைச்சர்கள் வீடியோ!

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். அன்றாட செலவுகளுக்கு அல்லல்பட்டதாக கூறப்படும் இந்த பெண் தற்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள், ஒரு வெள்ளை குதிரை மற்றும் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டில் வசித்து வருகிறார். மேலும், அவர் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடியை வருமானமாக குவித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அர்ச்சனாவுக்கு இந்த மாற்றத்தை தந்தது கடின உழைப்போ அல்லது குலுக்கல் சீட்டோ இல்லை. மாறாக, … Read more

கர்நாடகா நடைபயணத்தின் போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய ராகுல்: தொண்டர்கள் உற்சாகம்

காலடி: கர்நாடகாவில் நடந்த நடைபயணத்தின் போது ராகுல்காந்தி தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தேசியக் கொடியை காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. தற்போது  கர்நாடகாவில் அந்த நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலடியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அவர் மூவர்ண தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு, அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மேல் ஏறிச் சென்று கொடியை … Read more

சிவமூர்த்தி சரணரு

ஹைதராபாத்: கர்நாடக மாநிலம் லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பிரபலமான முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக 10-ஆம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், அந்த மாணவிகள் மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அமைப்பினர் … Read more