ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் 1307 வழக்குகள் பதிவு – அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66Aன் கீழ் நாடு முழுவதும் எந்த வழக்கும் பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த சட்டப்பிரிவின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும் … Read more

கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன்..

கர்நாடகா மாநிலம் குமுதாவில் உள்ள ராயேஸ்வரி காமக்ஷி தேவி கோயிலில் நடைபெற்ற பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  கொதிக்கும் எண்ணெய்க்குள் கைகளை விட்டு வடை சுட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடையை எடுத்த நபர் ஒருவருக்கு எவ்வித தீக்காயங்களும் ஏற்படவில்லை. ஒருவருக்கு, கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டும் தீக்காயம் ஏற்படவில்லையெனில், அம்மனின் அருள் உள்ளதாக நம்பப்படுவதாக பூசாரி தெரிவித்தார். Source link

உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை; பணமதிப்பிழப்பு வழக்கை விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.! ஒன்றிய அரசு வழக்கறிஞரின் பதிலால் அதிர்ச்சி

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வானது, பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வைத்த வாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் … Read more

பன்றி காய்ச்சலுக்கு இது தான்..தீர்வு?; அரசு பகீர் முடிவு; பொதுமக்கள் ஷாக்!

கேரளா மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும், அனைத்து பன்றிகளையும் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா மாநிலம், திருச்சூர் ஏட்டுமுனை பகுதியில் இருக்கும் தனியார் பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் சமீபத்தில் கூட்டமாக இறந்தன. உடனே இவற்றின் மாதிரிகள் போபாலில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கேரளாவில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிக்க பன்றி காய்ச்சல் … Read more

பீகாரில் போலீஸ் பஸ், பைக்குடன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் பலி..!

பீகாரில் போலீஸ் பஸ், பைக்குடன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், பஸ்சில் சிக்கிய பைக் ஓட்டுனர் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் பைக்கின் பெட்ரோல் டாங்க் தீ பிடித்தது. பைக் ஓட்டுனர் போலீஸ் பஸ்சின் அடியில் சிக்கியதால் மீளமுடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். தீ பற்றியதும் போலீசார் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். Source link

விசா தடையை 3 ஆண்டுக்கு பின்னர் நீக்கியும் சீனாவுக்கு நேரடி விமான சேவை கிடையாது; ஹாங்காங் வழியாக செல்லும் இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: மூன்று ஆண்டுக்கு பின்னர் விசா தடையை சீனா நீக்கிய பின்னரும், அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது என்பதால் ஹாங்காங் வழியாக இந்திய மாணவர்கள் பீஜிங் செல்கின்றனர். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது முதல் தற்போது வரை அந்த நாட்டுடனான நேரடி இந்திய விமான சேவை தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சீனாவில் படித்து வந்த மாணவர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், சீனாவுடனான விமான … Read more

நரபலி கொடுத்த பெண்களை வெட்டி சாப்பிட்ட தம்பதி!!

கேரளாவில் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையில் தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரண்டு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டு பெண்களையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி … Read more

வரும் 25, நவ.8ம்தேதி சூரிய, சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.! தேவஸ்தானம் தகவல்

திருமலை: வரும் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் அன்றைய நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்தாண்டிற்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அதன்படி வரும் 25ம்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை … Read more

கேஸ் விற்பனையில் சரிவு.. ஆயில் நிறுவனங்களுக்கு ரூ22,000 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு

வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர் விற்பனையால் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் வீட்டு உபயோகத்திற்கு விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன. சர்வதேச … Read more

எச்சரிக்கை! பொது இடங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம்!!

ஸ்மார்ட்போன் பயனர்கள் பொது இடங்களில் போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிஷா போலீசார் எச்சரித்துள்ளனர். பொது மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்று. தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு பொது இடங்களில் சார்ஜ் போடுவது அதிகரித்துள்ளது. அப்படி சார்ஜிங் ஸ்டேஷன், யூ.எஸ்.பி பவர் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்வதால் சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மக்கள் போனில் … Read more