ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக அறிவித்தது மத்திய அரசு..

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். அதிகபட்சமாக 17 ஆயிரத்து 951 ரூபாய் வரை போனசாக வழங்கப்படும் என்றும், . சர்வதேச அளவில் எல்பிஜி விலை உயர்ந்திருப்பதை கவனத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு … Read more

காலிஸ்தானி பிரிவினைவாத விவகாரம்; இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த ‘இன்டர்போல்’.! ஒன்றிய அரசுக்கு பின்னடைவு

புதுடெல்லி: காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பு விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளதால், ஒன்றிய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பானது தனிநாடு கோரியும், இந்தியாவுக்கு எதிராக சதிவேலைகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வௌிநாட்டில் பதுங்கியிருக்கும் குர்பத்வந்த் சிங்குக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்காக ஒன்றிய அரசின் தரப்பில் சர்வதேச போலீஸ் அமைப்பான … Read more

மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? பணமதிப்பிழப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி!

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், பணமதிப்பிழப்பு … Read more

பாகிஸ்தானில் இருந்து 9 மாதங்களில் இந்தியாவுக்குள் 191 டிரோன்கள் ஊடுருவல் – மத்திய அரசு

பாகிஸ்தானில் இருந்து கடந்த 9 மாதங்களில் 191 டிரோன்கள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாகவும், இதில் 7 டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை வழியாக 171 டிரோன்களும், ஜம்மு செக்டார் வழியாக 20 டிரோன்களும் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், பெரோஸ்பூர், அபோகர் ஆகிய இடங்களில் 7 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. Source link

இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால் அது பாஜகவுக்குதான் செல்லும்; டெல்லி துணை முதல்வர் கருத்து

புதுடெல்லி: இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டால், அந்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றடைந்துவிடும் என்று டெல்லி துணை முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிலாஸ்பூரில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார். இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக இருந்தும், ஆம்ஆத்மி கட்சி காங்கிரசை முந்திக் கொண்டு … Read more

ராகுல் காந்திக்கு பாஜ பதிலடி; பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி, பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகா மாநிலம் வந்து சேர்ந்தது. அங்கு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது. பதுங்கி … Read more

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பட்ஜெட் இருக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 7.41%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் 7%ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பரில் 0.41% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் மிகப் பெரும் பிரச்சனைகளில் கச்சா எண்ணெய் விலை முக்கியமானது எனவும் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் தடுக்கவே பெட்ரோல், … Read more

சட்டபேரவை கட்டிடத்தில் பேய்?; 4 ஆண்டில் 6 எம்.எல்.ஏக்கள் சாவு!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இதற்கு முன்பு சுடுகாடாக இருந்ததாகவும், அந்த இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்ட சட்டப்பேரவை கட்டடத்தில் பேய் உலவுவதாகவும் மூட நம்பிக்கை நிலவி வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கிஷண் மோத்வானி என்பவரது மரணம் தான் இந்த மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போடும் விதமாக அமைந்தது. இந்த மரணத்துக்கு பின்னர் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையான 200 என்ற … Read more

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 144 நாட்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 என்ற விலையிலும், டீசல் ரூ.94.24 என்ற விலையும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இன்றைய மத்திய … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு?

டெல்லி: கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.