பிஃபா மகளிர் கால்பந்து கோப்பை போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஆரம்பம்..

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை  போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கி உள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. தலைநகர் புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டேர்  கலந்துகொண்டனர். போட்டிகளை ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 30 ஆம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

ஆசிரியர் நியமன முறைகேடு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தொடக்க ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, தொடக்கக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்த பலாஷிபாரா எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், நேற்று அதிகாலை அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கையில் … Read more

மின்சாரத்தில் இயங்கும் Atto 3 என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள சீன நிறுவனம்!

சீனாவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD, மின்சாரத்தில் இயங்கும் Atto 3 என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. Atto 3 ரகத்தில் 15 ஆயிரம் கார்களை அடுத்த ஆண்டில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை ஆலையில் கார் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. Atto 3 காரின் விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும். Source link

ரயில் டிக்கெட் வருவாய் கடந்த 6 மாதத்தில் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அதிகம்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: இந்திய ரயில்வேக்கு முன்பதிவில்லா டிக்கெட் மூலம் கடந்த 6 மாதத்தில் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அதிகம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வருவாய் ரூ.1,086 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.6,515 கோடியாக உயர்ந்துள்ளது.

`அரசியல் நோய்களை சிறப்பாக குணப்படுத்தி வருகிறது பாஜக அரசு!’- பிரதமர் மோடி

குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கி வங்கி அரசியலால் பீடித்திருந்த நோய்களுக்கு தனது அரசு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறப்பான முறையில் குணப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தின் அசர்வா பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் சுகாதார வசதிகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர், குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், சுகாதாரம், மின்சாரம், குடிநீர் வசதியின்றை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என பல்வேறு நோய்கள் பீடித்திருந்ததாகக் கூறினார். இதற்கு வாங்கி வங்கி அரசியலே அடிவேர் … Read more

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழக்கு – காஷ்மீரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு ‘ஜமாத்-இ-இஸ்லாமி, ஜம்மு காஷ்மீர்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இது ஒரு சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. ஆனாலும் பல்வேறு வகையிலும் இந்த அமைப்பு நிதி திரட்டி வந்தது. இந்த நிதி, காஷ்மீரிலும் நாட்டின் பிற இடங்களிலும் தீவிரவாத செயல்களுக்காக ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுக்கு மாற்றி விடப்படுவதாக குற்றச்சாட்டு … Read more

இடைத்தேர்தல் சின்னம் ஷிண்டே கட்சிக்கு வாள் – கேடயம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

மும்பை: ஷிண்டே அணியின் ‘பாலாசாகேப் சிவசேனா’ கட்சிக்கு வாள் – கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஷிண்டே அணி, உத்தவ் அணி என இரண்டாக பிளவு பட்டுள்ளது. கட்சி சின்னம், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் போன்ற பிரச்னைகளில் இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 3ம் தேதி அந்தேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை … Read more

தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (யுஏஇ) விமானம் மூலம் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்தது கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சுங்கத் துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள யுஏஇ துணைத் தூதரக முகவரியிட்டு இந்த கடத்தல் நடைபெற்றதும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர், யுஏஇ துணைத் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். … Read more

ஏர்டெல்-ஜியோ யாருடைய 5 ஜி நெட்வொர்க் வேகமாக இயங்குகிறது?

பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த மாதத்தில் சோதனை முறையில் 5 ஜி நெட்வொர்க் சேவையைத் தொடங்கியுள்ளன. ஜியோவின் 5G நெட்வொர்க், வினாடிக்கு 600 மெகாபிட் அளவிற்கு மேல் சராசரி பதிவிறக்க வேகத்தைக் காட்டுகிறது. பாரதி ஏர்டெல் நெட்வொர்க்கின் அதிகபட்ச வேகம் சுமார் 516 எம்பிபிஎஸ் என, பிராட்பேண்ட் வேக ஆராய்ச்சி நிறுவனமான ஓக்லா செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  Source link

ஜம்முவில் 18 இடங்களில் என்ஐஏ ரெய்டு: தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த அறக்கட்டளை தலைவர் கைது

ஜம்மு: தீவிரவாத அமைப்புகளுக்கு  நிதி அளித்தது தொடர்பாக ஜம்முவில்  18 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளித்து வருபவர்களை ரகசியமாக கண்காணித்து, பல்வேறு இடங்களில் தேசிய புல னாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஜம்மு காஷ்மீரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அல் ஹுதா கல்வி அறக்கட்டளை மூலம் நன்கொடைகள், ஹவாலா மூலம் நிதி திரட்டி, அதை ஜம்மு காஷ்மீர் … Read more