ஆஸ்கருக்கு சென்ற இந்திய படத்தில் நடித்த சிறுவன் புற்றுநோய்க்கு பலி
புதுடெல்லி: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பிலிருந்து சென்றுள்ள லாஸ்ட் பிலிம் ஷோ படத்தில் நடித்த ராகுல் கோலி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தான். அவனுக்கு வயது 10. தியேட்டரில் ஆபரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்து பொழுதை கழிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய படம் லாஸ்ட் பிலிம் ஷோ. இந்த குஜராத்தி படம், ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு பட பட்டியலில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். … Read more