ஆர்டர் செய்தது வாட்ச் வந்தது 4 வறட்டி: அதிர்ச்சி கொடுத்தது ப்ளிப்கார்ட்

உத்தரபிரதேசம்: அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் … Read more

தலைவர் பதவிக்கு நான் பரிந்துரைத்த 3 தலைவர்களின் பெயரை சோனியா ஏற்கவில்லை; கட்சியினரிடம் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் பரிந்துரைத்த 3 தலைவர்களின் பெயரை சோனியா காந்தி ஏற்கவில்லை என்றும், தன்னையே அவர் போட்டியிட சொன்னதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், ‘காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும்படி … Read more

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு; திரிணாமுல் எம்எல்ஏ கைது.! அமலாக்கத்துறை நடவடிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா இன்று அதிகாலை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் அம்மாநில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர்கள் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனையை விசாரிக்கும் அமலாக்கத்துறை, பார்த்தா சாட்டர்ஜி … Read more

அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மனு – தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்ட விவகாரத்தில் சச்சின் வாசி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக் ஹோட்டல்கள் பார்களில் இருந்து மாதம் … Read more

ஷிண்டே தலைமையிலான ‘பாலாசாஹேப்பின் சிவ சேனா’ கட்சிக்கு போர்வாள் – கேடயம் சின்னம் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாஹேப்பின் சிவ சேனா கட்சிக்கு போர் வாள் – கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என சிவ சேனா இரண்டாக பிரிந்ததை அடுத்து, கட்சியின் பெயருக்கும் வில் அம்பு சின்னத்திற்கும் உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். கட்சியின் பெயரும் சின்னமும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி, உத்தவ் … Read more

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் காரிடாரை திறந்து வைத்தர் பிரதமர் மோடி!

ஆன்மீக  நகரமான உஜ்ஜயினியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11, 2022) தொடங்கி வைத்தார். ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவியும் நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்கங்களில்’ ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித  இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘ஸ்ரீ மஹாகால் லோக்’ என்று அழைக்கப்படும் வழித்தடத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் கோவிலில் பூஜை செய்தார். மோடி, பாரம்பரிய … Read more

கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்; ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கான ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கான நீதிபதிகள் ெபயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் தொடர்பான பரிந்துரையை ெசய்தது. அந்த பட்டியலில் உள்ள 6 பேரில் 3 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற … Read more

அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் | இறுதிச் சடங்கில் தலைவர்கள் பங்கேற்பு

லக்னோ: மறைந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுடெல்லி அருகே குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். … Read more

மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு கேடயத்துடன் கூடிய இரட்டை வாள் சின்னம் ஒதுக்கீடு

டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு கேடயத்துடன் கூடிய இரட்டை வாள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவசேனையின் வில் அம்பு தேர்தல் சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து இரு பிரிவுகளுக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்கீடு செய்தது. ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு ஜோதி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்திய வானிலை மையத்தில் 900 வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

இந்திய வானிலை மையத்தில் 900 அறிவியல் உதவியாளர் காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Scientific Assistant காலியிடம்: 990 தகுதி: இயற்பியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐ.டி அல்லது எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18.10.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி … Read more