ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை | இந்திய மகளிர் அணித் தலைவர் வீட்டிற்கு டிவி வழங்கிய ஜார்க்கண்ட் அரசு

ரஞ்சி: ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை இன்று பார்க்க இருக்கின்றனர். நடைபெற்றுவரும் ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி, வலிமையான அமெரிக்க அணியை … Read more

கோயில் நடை திறப்பு… ஐயப்ப பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலின் நடை மாதாந்திர பூஜைக்காக திறந்து மூடப்படுவது வழக்கம். இதன்படி ஐப்பசி மாத ( மலையாளத்தில் துலாம் மாதம்) பூஜைக்காக கோயில் நடை வரும் 17 ஆம் தேதி (அக்டோபர் 17) திறக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்கள் பூஜைக்கு பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை … Read more

பண கஷ்டத்தை போக்க நரபலி… 2 பெண்களை கொடூரமாக கொன்ற கேரள தம்பதி கைது!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா என்ற இருவரை, ஒரு தம்பதி தங்களின் பண கஷ்டங்கள் தீர நரபலி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக, அந்த தம்பதியையும், அவர்களின் ஏஜெண்ட் ஒருவரையும் போலீசார் இன்று (அக். 11) செய்யப்பட்டுள்ளனர். ரோஸ்லின், பத்மா ஆகிய இருவருக்கும் ஏறத்தாழ 50 வயதிருக்கும். அவர்கள் இருவரும் எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், ரோஸ்லின் கடந்த … Read more

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!!

லக்னோ: அரசு மரியாதையுடன் உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. முலாயம் சிங் யாதவின் சொந்த கிராமமான சைபாயில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கில் திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி பங்கேற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்தநாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த தேடுதல் வேட்டையின்போது, ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். காஷ்மீர் பிராந்திய காவல்துறை நேற்று இதனை தெரிவித்தது. மேலும், தேடுதல் … Read more

தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு தள்ளுபடி

டெல்லி : தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மிலானி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஏற்கனவே ரவீந்திரநாத் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்ததை அடுத்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

2 பெண்கள் நரபலி.. துண்டு துண்டாக வெட்டி உடல் புதைப்பு.. தம்பதி பகீர் தகவல்..!

கேரளாவில், பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவத்தில், தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் லாட்டரி சீட்டு விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக, பத்தனம்திட்டா … Read more

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்: தலைமை நீதிபதி யுயு லலித் பரிந்துரை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டிஓய் சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்திருந்தார். வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை … Read more

பண மழையும், நரபலியும்… துண்டு துண்டாக வெட்டப்பட்ட தமிழகப் பெண்- கேரளாவில் பயங்கரம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்திரா பகுதியை சேர்ந்த பத்மம் (52). காலடியைச் சேர்ந்த ரோசிலி (50). இவர்கள் இருவரும் கடந்த 26ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. திருவல்லாவைச் சேர்ந்த பகவந்த் சிங் என்ற மந்திரவாதி அதிக பணம் கொழிக்க வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பெண்களையும் கடத்திச் சென்று நரபலி கொடுத்தது தெரியவந்துள்ளது. … Read more

தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் தூண்கள்: பிரதமர் மோடி

டெல்லி: தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் இரண்டு தூண்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஐதராபாத்தில் இன்று துவங்கியது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்திற்கான இரண்டு தூண்கள். தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. வங்கி சேவை இல்லாத 450 மில்லியன் மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட … Read more