திருப்பதி | ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை மற்றும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் 6 கி.மீ. தொலைவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 2 நாட்கள் வரை வரிசையிலேயே சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஞாயிறன்று மட்டும், திருப்பதி ஏழுமலையானை 86,188 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 41,032 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமிக்கு உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.5 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, … Read more

7TH PC: இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர்ந்தது

7th Pay Commission: சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை அடுத்து, இந்த டி.ஏ உயர்வை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் வராத நிலையில், வேறு ஒரு மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.  மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்கு … Read more

உத்தவ் தரப்பிற்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!

முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பிற்கு தீப்பந்தம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்திற்கு, உத்தவ் தாக்கரே தரப்பும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும் உரிமை கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் அதனை முடக்கியது. அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உதயசூரியன் சின்னத்தை ஒதுக்குமாறு இரு தரப்பினரும் கேட்டதால், அது திமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து உத்தவ் தரப்பிற்கு தீப்பந்தம் சின்னத்தையும், சிவசேனா – உத்தவ் பாலாசாகேப் … Read more

இளைஞர்கள் வாழ்வை அழிக்கும் நகர்ப்புற நக்சல்கள் புதிய அவதாரம்: பிரதமர் மோடி ஆவேசம்

பருச்: ‘இளைஞர்கள் வாழ்வை அழிக்கும் நகர்ப்புற நக்சல்கள் புதிய அவதாரத்தில் நுழைய முயற்சிக்கின்றன. அவற்றை குஜராத் அழித்துவிடும்’ என பிரதமர் மோடி ஆவேசமாக பேசி உள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க, 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று பருச் மாவட்டத்தில் அவர், நாட்டின் முதல் மொத்த மருந்து பூங்கா உட்பட ரூ.8 ஆயிரம் கோடியிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் … Read more

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் காலமானார் – தலைவர்கள் இரங்கல்; சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்கு

புதுடெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ்(82) நேற்று காலமானார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆக. 22-ல் அனுமதிக்கப்பட்ட முலாயம் சிங்குக்கு, சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8.16 மணிக்கு அவர் உயிரிழந்தார். உத்தர … Read more

உத்தவ் அணிக்கு தீப்பந்தம் சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

மும்பை: உத்தவ் தாக்கரேவுக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோல், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற கட்சி பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துறைச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் … Read more

எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான நிலுவை வழக்கு விவரம் 4 வாரங்களில் தர கெடு: ஐகோர்ட்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அதுசார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கு … Read more

உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி வழக்கு

புதுடெல்லி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியல் சாசன சட்டம் காற்றில் வீசப்பட வேண்டுமா?’ என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘இந்தியாவில் பசுவை வணங்குவதாலும், பசுவை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும், அதனை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் … Read more

கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்த பபியா முதலை மரணம்: பல்வேறு கட்சியினர், பக்தர்கள் அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்து, பிரசாதத்தை மட்டுமே தின்று வளர்ந்த பபியா முதலை மரணமடைந்தது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது கும்பளா கிராமம்.  இது கர்நாடக மாநில எல்லையில் உள்ள பகுதியாகும். இங்கு பிரசித்தி பெற்ற  அனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. குளத்தின் நடுவே கோயில்  அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த குளத்தில் கடந்த 75 வருடங்களுக்கு  மேலாக பபியா என்ற ஒரு முதலை வசித்து வந்தது. காலையும், மதியமும் கோயிலில் … Read more