பணமாலையுடன் மணமகன்.. ஆழ்ந்த உறக்கத்தில் மணப்பெண்.. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காமெடி..!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண் தூங்கிக்கொண்டிருந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பண மாலையுடன் நிற்கிறார். அவரது அருகேயுள்ள இருக்கையில் பட்டுப்புடவை, தங்க நகை அலங்காரத்துடன், மணப்பெண் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர், செல்போனில் இதை வீடியோ பதிவு செய்து வெளியிட,இணைய தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்வையிட்ட பலரும், தூங்கும்போது மணப்பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று, பதிவிட்டு வருகின்றனர்.

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு அரசு மரியாதையுடன் முலாயம் சிங்கின் இறுதிச்சடங்கு – உ.பி அரசு அறிவிப்பு

மறைந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளநிலையில், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் உதவியுடன் அரியானா மாநிலம் குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த … Read more

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை..!

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், ரத்நாலு குண்டா பகுதியை சேர்ந்தவர் கோமலேஸ்வரி (17). இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் பத்மாவதி அரவணைப்பில் இருந்து வந்தார். கோமலேஸ்வரி ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்டர்மீடியேட் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோமலேஸ்வரி பக்கத்து வீட்டில் உள்ள நாய்க்குட்டியை பார்ப்பதற்காக சென்றார். இரவு நேரத்தில் கோமலேஸ்வரி வீட்டிற்கு வந்ததைக் கண்ட கணவன் – மனைவி, எங்கள் வீட்டில் இரவு … Read more

“குஜராத்துக்குள் நுழைய ‘அர்பன் நக்சல்’கள் முயற்சி” – ஆம் ஆத்மி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

பரூச்: குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் ‘அர்பன் நக்சல்’கள் நுழைய முற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநில பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதல் மருந்து பூங்காவை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர். பின்னர் அவர் பேசுகையில், குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் ‘அர்பன் நக்சல்கள்’ நுழைய முற்படுகிறார்கள். அவர்கள் தங்களின் உடைகளை மாற்றியுள்ளனர். நம் மாநிலத்தின் துடிப்புமிகு இளைஞர்களை அவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். இந்த அர்பன் நக்சல்கள் நம் இளம் தலைமுறையினரை அழிக்க நாம் … Read more

பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் – மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சல்மான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றுள்ள இயக்குநர் சஜித் கானை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். … Read more

பத்ராசால் மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு அக்-17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மும்பை: மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை, மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய … Read more

அழிவின் விளிம்பில் உப்பு கேக் தயாரிப்பு.. இழுத்து பிடித்திருக்கும் மணிப்பூர் கிராமத்தினர்!

பழமையான தொழில்கள் பலவும் காலப்போக்கில் அழிந்துக்கொண்டு வருவதால் அந்த பழமை வாய்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் பலரும் பாரம்பரியத்தை பின்பற்ற முடியாமலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தின் பழமையான தொழிலாளக இருந்து வந்தது உப்பு தொழில் ஒன்று. மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த உப்பு தொழில் பரிணாமவளர்ச்சி அடைய அடைய தற்போது அதுவும் அழிவு நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய … Read more

கேரளா | அனந்த பத்மநாப சுவாமி கோயில் ‘சைவ’ முதலை பாபியா உயிரிழப்பு

காசர்கோடு: கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வாழ்ந்து வந்த கோயில் முதலையான ‘பாபியா’ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.அதற்கு வயது 75. இந்த முதலை கோயிலில் வழங்கப்பட்ட சைவ பிரசாதத்தை உண்டு உயிர் வாழ்ந்ததால் மிகவும் புகழ் பெற்றிருந்தது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா என்ற கிராமத்தில் ஒரு குளத்திற்கு நடுவில் அமைந்துள்ளது அனந்த பத்மாநாப சுவாமி கோயில். இது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்கு மூலவர் என்று கருதப்படுகிறது. இந்தக் … Read more

ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் வசித்த ‘சைவ’ முதலை இறைவனடி சேர்ந்தது!

நமது வாழ்நாளில் எத்தனையோ அதிசய கதைகளை, புராணங்கள், காப்பியங்கள் மூலமாகவும், செவிவழிக்கதைகள் மூலமாகவும் கேட்பதுண்டு. ஆனால் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேரதிசயமாக இருந்த முதலையாழ்வார் என அழைக்கப்பட்ட சைவ முதலை இன்று இறைன் திருவடி சேர்ந்தது. கேரளாவின் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பகவான் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்த ‘சைவ முதலை’ பபியா இன்று, அதாவது அக்டோபர் 10 அன்று காலமானது. கேரள மாநிலத்தின் காசர்கோடில் உள்ள அனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவில் … Read more