டெல்லியில் ஒற்றைச் சாளர வசதியின் கீழ் 1000 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்

ஒற்றைச் சாளர வசதியின் கீழ் டெல்லியில் 1,000 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்  நிறுவப்பட்டுள்ளன.   இந்த சார்ஜிங் மையங்களில் சுமார் 59 சதவீதம் குடியிருப்போர் நலச் சங்கங்களால் நிறுவப்பட்டுள்ளன. 15 சதவீத EV சார்ஜர்கள் அலுவலக வளாகங்களிலும், 13 சதவீதம் மின் ஆட்டோ ரிக் ஷா பார்க்கிங் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளன. மால்கள், கடைகள், உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நிறுவப்படும் இந்த 1,000 சார்ஜிங் பாயிண்ட்டுகளுக்கு அரசு மானியமாக ரூ.60 லட்சம் செலவிட உள்ளது. Source link

உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்: சோகத்தில் மூழ்கிய உ.பி.மக்கள்..!!

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் (82) காலமானார். அகிலேஷ் யாதவ், தனது தந்தை முலாயம் சிங் யாதவ் மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முலாயம் சிங் யாதவ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

கோவில் பிரசாதம்தான் முழுநேர உணவு… உயிரிழந்தது கேரளாவின் சைவ முதலை!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான சிறப்புகளையும் அம்சங்களையும் பெற்றுள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதன்படி கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றை முதலை ஒன்று ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வந்தது. பொதுவாக கோவில்களில் யானைகளே பாதுகாப்புக்காக வைத்திருப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் காசர்கோட்டில் உள்ள கும்பாலா என்ற இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அனந்தபுரா பத்மநாப சுவாமி கோயில் ஏரியின் நடுவில் உள்ளது. இதனை முதலைதான் … Read more

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் பாஜக போட்டி

அய்சால்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதியிலும் பாஜக போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மலைப்பகுதிகள் நிறைந்த அம்மாநிலத்தில் 39 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தொகுதி மட்டும் பொது தொகுதி ஆகும். அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 28 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. … Read more

அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி : அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தி வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்ற அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷா தலைமையிலான 30 பேர் கொண்ட ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலை குழு 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது தொகுப்பை கடந்த மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. அதில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி … Read more

இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது!?

கர்நாடகாவில் இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வாடகை கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும், ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு என கூறி 3 நாட்களுக்குள் வாடகை ஆட்டோ சேவையை இந்த நிறுவனங்கள் கைவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், … Read more

தனித்துவமான தலைவர் முலாயம் சிங்: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி..!

தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர் என்று, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முலாயம் சிங் யாதவ் தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் அவர் ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராக அவர் வலுவான இந்தியாவுக்காக செயல்பட்டார். நாடாளுமன்றத்தில் அவரது தலையீடுகள் எல்லாம் தொலைநோக்கு பார்வை … Read more

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இந்தியே பயிற்று மொழி: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது. … Read more

இட ஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட முலாயம் சிங்: தலைவர்கள் இரங்கல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உயிரிழந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு குருகிராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 82. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார். முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு கட்சி தலைவர்கள் பலரும் … Read more

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான முலாயம் சிங், கடந்த வாரம் முதல் குருகிராம் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம் சிங், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். முலாயம்சிங் காலமான தகவலை, ட்விட்டரில் அவருடைய மகனும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். முலாயம் … Read more