சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் (82) காலமானார். உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாம்யம்சிங் யாதவ் (82) குருகிராம் மருத்துவமனையில் காலமானார். உத்தரப்பிரதேச முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ்

'காங்கிரஸுக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சக்தி நானே..' – சசி தரூர் பேச்சு

மும்பை: காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று பேசியுள்ளார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி சசி தரூர் மும்பையில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது டவுன்ஹாலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி … Read more

Domestic Violence: குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது. குடும்ப வன்முறை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிணைக்கப்பட்டு இருந்த பெண் அரசு சாரா நிறுவனத்தால் மீட்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் … Read more

இடைவிடாது பெய்த மழை.. இடிந்து விழுந்த 2 மாடிக்கட்டடம்.. -3 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக லஹோரி கேட் பகுதியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடம் மிகவும் பழுதாகி இருந்ததாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர் Source link

புனித் ராஜ்குமார் பட டிரைலர் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: கன்னடத்தில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி, தனது 46வது வயதில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்நிலையில், அவர் நடித்த ‘கந்தாடகுடி’ என்ற படம், வரும் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் பற்றி பிரதமர் மோடியுடன் புனித் ராஜ்குமார் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினார் என்று, புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி டிவிட்டரில் … Read more

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை… பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… வெளியான ஹேப்பி நியூஸ்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று ஒரேநாளில் பெய்த மழையில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி இன்று (அக்டோபர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் புத்தா நகர் மாவட்ட பள்ளி ஆய்வாளர் தரம்வீர் … Read more

பாதுகாப்பு அமைச்சகத்தில் கீழ்நிலை பணிகளுக்கான தேர்வில் புளுடூத் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய 29 பேர் கைது!

சென்னையில் நடந்த பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான கீழ்நிலை பணிகளுக்கு நடந்த தேர்வில் புளுடூத் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானாவைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் ஆர்மி பப்ளிக் பள்ளியில் “Defence civilian Recruitment Group ‘C’ Exam” நேற்று காலை மற்றும் மாலை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் ஆயிரத்து 728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதில் பங்கேற்ற அரியானாவைச் சேர்ந்த சுமார் 29 நபர்கள் … Read more

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிட உதயசூரியன் சின்னத்தை கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

புதுடெல்லி: சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், தனக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கும்படி உத்தவ் தாக்கரே கேட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளார். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.   இந்நிலையில், இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி அந்தேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், சிவசேனாவின்  … Read more

மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால்: டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வழிபட மாட்டேன்’’ என்று உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், அதுகுறித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விமர்சித்த பாஜக, ராஜேந்திர பால் கவுதமை, பதவியில் இருந்து நீக்க … Read more

உத்தரகாண்ட் பனிச்சரிவு மேலும் 10 உடல்கள் உத்தர்காசி வந்தன

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் 29 பேர் கொண்ட குழு கடந்த 4ம் தேதி மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். இவர்கள் 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தபோது கடுமையான பனிச்சரிவில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், விமானப்படை மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் களமிறக்கப்பட்டனர். 6வது நாளாக நேற்றும் தேடுதல் பணி தொடர்ந்தது. , இது குறித்து நேரு மலையேற்ற பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், `இதுவரை 27 … Read more