லிஃப்ட் கேட்டு காரில் ஏறிய பெண் பாலியல் வன்கொடுமை!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி முடிந்து வீடு திரும்ப தாமதமானது. எனவே அந்த வழியே வந்த ஒரு காரில் லிஃப்ட் கேட்டு ஏறிச்சென்றார். கார் சிறிது தூரம் சென்றநிலையில் காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி காரிலேயே மயக்கமடைந்தார். பின்னர் கார் ஓட்டுனர் … Read more

அமெரிக்காவை விட உ.பி. சாலைகள் மேம்படும்: அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

லக்னோ: இந்திய சாலைகள் மாநாட்டின் 81-வது ஆண்டுக் கூட்டம் உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது. வரும் 2024-ம் ஆண்டுக்கு முன்னதாகவே அமெரிக்காவை காட்டிலும் உத்தர பிரதேசத்தின் சாலைகள் தரம்மிக்கதாக மாறும். இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரும் நாட்களில் உத்தர பிரதேச மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே … Read more

மோடியை வீழ்த்த சூறாவளி சுற்றுப் பயணம் ரூ.100 கோடியில் தனி விமானம் வாங்குகிறார் சந்திரசேகர ராவ்: 3வது அணியை உருவாக்க ஏற்பாடு

திருமலை: மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிரான அணியை உருவாக்க முயன்று வரும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ், இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரூ.100 கோடியில் விமானம் வாங்குகிறார். தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் முதல்வர் சந்திரசேகர ராவ், ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ (டிஆர்எஸ்) என்ற தனது மாநில கட்சியை சமீபத்தில், ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ (பிஆர்எஸ்’ என்று பெயர் மாற்றம் செய்து, தேசிய கட்சியாக மாற்றினார். 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்கவும், தேசிய … Read more

`இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம் இது!’-குஜராத்திலுள்ள கிராமத்தை அறிவித்தார் பிரதமர்

மின்சாரத்தை இதுவரை நுகர்வு செய்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே உற்பத்தி செய்யும் நிலை உருவாகியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சொந்த மாநிலமான குஜராத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரியசக்தி கிராமமாக அறிவித்தார். அத்துடன் மொதேராவில் உள்ள சூரிய கோயிலில் முப்பரிமாண தொழில்நுட்பத்தையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய பிரதமர், குஜராத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என … Read more

பெண் வயிற்றில் 5 ஆண்டாக கத்தரிக்கோல்: விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹர்சீனா (30). கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதன் பிறகு அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. சிறுநீரக கற்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். அண்மையில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்தபோது அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து … Read more

“ பாஜக தொண்டர்களே பாஜகவின் தோல்வியை எதிர்பார்க்கிறார்கள் ” – அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் உள்ள பல பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வல்சாத் மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். குஜராத்தின் பல பகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்து மதத்திற்கு எதிரானவர் என பதாகைகள் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  Source link

மனைவியை பிரிந்த சோகம் சட்டப்பேரவைக்கு 3 குண்டு மிரட்டல்: வலிய வந்து சிக்கிய இன்ஜினியர்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவை கட்டிடத்துக்கு தொடர்ந்து மூன்று முறை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது  செய்யப்பட்டார். கர்நாடகாவில், பெங்களூரு ஊரக மாவட்டம் ஹெப்பகோடி ஆனந்த் நகரை  சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் எலக்ட்ரானிக் சிட்டியில் தனியார் ஐடி நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த  வெள்ளிக்கிழமை நள்ளிரவு விதான சவுதா தலைமைச் செயலாளர் அலுவலகத்தை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்ட இவர், விதான சவுதாவில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்  எந்த நேரத்திலும் அது … Read more

2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இன்று முதல் தொடக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் 2024-ம் ஆண்டு முடிகிறது. இந்நிலையில், நடப்பு ஆட்சிக் காலத்தின் நிறைவு நிதி ஆண்டான 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. கரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருந்த சூழலில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வந்திருந்தபோதிலும், … Read more

குஜராத்தில் நதிகள் இணைப்புக்கு எதிர்ப்பு காங். எம்எல்ஏக்கு பாஜ அடி, உதை

அகமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை பாஜ பிரமுகர் அடித்து உதைத்தார். இதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேல். பழங்குடியின தலைவரான இவர் பர்-தபி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம்  கெர்காம் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது  அங்கு வந்த கும்பல் காரை வழிமறித்து ஆனந்த் படேலை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். எம்எல்ஏ … Read more

மதரீதியாக மக்கள் தொகை பெருக்க சர்ச்சை இந்தியாவில் அதிகம் காண்டம் பயன்படுத்துவது முஸ்லிம் தான்: ஆர்எஸ்எஸ்.சுக்கு அசாதுதீன் பதிலடி

ஐதராபாத்: நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்றும் முஸ்லிம்கள்தான் அதிகமாக காண்டம் பயன்படுத்துகின்றனர் என்று அசாதுதீன் ஒவைசி எம்பி தெரிவித்தார். தசரா விழாவை ஒட்டி மகாராஷ்டிரா, நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘மத ரீதியிலான மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. மக்கள்தொகை கொள்கையை வகுத்தால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிட்டும். மத ரீதியிலான மக்கள்தொகை பெருக்கம், எதிர்காலத்தில் பூகோள ரீதியாகவும் எல்லைப் பிரச்னைகளை உருவாக்கும்,’ என பேசினார். இந்தியாவில் முஸ்லிகளின் மக்கள்தொகை … Read more