24 மணி நேரமும் டெல்லியில் ஜாலி: 300 கடைகள், மால்களுக்கு அனுமதி

புது டெல்லி: டெல்லியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெலிவரி கடைகள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் செயல்பட ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இதற்காக 314 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 300க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

ராஜஸ்தானில் சுற்றுலா 2 ஆண்டுக்கு பின் மீண்டும் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ ரயில்

ஜெயப்பூர்: ராஜஸ்தானில்  புகழ் பெற்ற, ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ சுற்றுலா ரயில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும்  இயக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக, ராஜஸ்தான் சுற்றுலாத்  துறை சார்பில் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ என்ற சிறப்பு சுற்றுலா ரயில், 1982ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் சேவையும் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது, … Read more

ரூ.856 கோடியில் உருவாகும் மகாகாலேஸ்வர் கோயில் 200 சிலை, 100 அழகிய தூண் சிவப்புராண சுவர் ஓவியங்கள்: உஜ்ஜைனியில் நாளை திறப்பு

உஜ்ஜைன்: உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் சீரமைப்பு பணிகளின் முதல் கட்ட பணிகள் முடிந்த நிலையில் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். ஒன்றியத்தில் பாஜ பதவியேற்றது முதல், கோயில்களை பிரமாண்ட முறைகளில் கட்டி வருகிறது. ஏற்கனவே உள்ள பிரபலமான பழைய கோயில்களை பல கோடி செலவில் புதுப்பித்து, சர்வதேச மக்களை கவரும் வகையில் மாற்றி அமைத்து வருகிறது. அயோத்தியில் பல ஆயிரம் கோடியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், … Read more

144 மக்களவை தொகுதிகளில் 40 பேரணி தோற்றதை பிடிக்க மோடி வியூகம்: ஜாதி, மத தலைவர்களுக்கு வலை

புதுடெல்லி: கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தோற்ற 144 தொகுதிகளில் பிரதமர் மோடி 40 பேரணிகளை நடத்த உள்ளார்.  கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களில் வெற்றி பெற்றன. இதில், பாஜ மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றியது. பல தொகுதிகளில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜ.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காலம் வேகமாக … Read more

டெல்லி | இடிந்து விழுந்த கட்டிடம்: 4 வயது சிறுமி பலி; பலர் காயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட சுமார் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். தேசிய மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் வால்மீகி மந்திர் அருகே உள்ள ஜிபி சாலையில் அமைந்திருந்த வீடு ஒன்று தான் இடிந்து விழுந்துள்ளது. அந்த வீட்டில் … Read more

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் ஒரேநாளில் பிடிபட்ட 4.37 கிலோ தங்கம் – சிக்கியது எப்படி?

ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நபர்களிடமிருந்து 4.37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலில் துபாயிலிருந்து வந்த மூன்று பெண்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் மூவரும் பேஸ்ட் வடிவ தங்கம் மற்றும் 24 காரட் தங்கச் சங்கிலிகளை தங்கள் உள்ளாடைகளில் மறைத்து கடத்திவந்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.72 கோடி மதிப்புள்ள 3.28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து குவைத்திலிருந்து வந்த இரண்டு ஆண் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய … Read more

Video: அய்யோ…பாவம்! லாரியில் பலமாக மோதிய காண்டாமிருகம் – சாலையில் சரிந்து விழுந்தது!

இந்தியாவில் புலி, காண்டாமிருகம் போன்ற பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கின்றன. இதுபோன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளுக்கு என பாதுகாப்பட்ட பகுதியை அமைத்து, பல்வேறு சூழலியல் சார்ந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், அசாம் மாநிலத்தின் அதிகம் காணப்படும் காண்டாமிருகங்கள் வசிக்கும் வனப்பகுதியை காசிரங்கா தேசிய பூங்காவாக அரசு பாதுகாத்துவருகிறது. காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை தடுக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வனத்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் இதில் பங்காற்றுகின்றன. இந்நிலையில், காசிரங்கா தேசிய … Read more

காமாக்யா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் புகழ்பெற்ற காமாக்யா கோயிலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். 3 நாள் பயணமாக அசாம் சென்றுள்ள அமித் ஷா, கவுகாத்தியில் நேற்று மாநில பாஜக அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று காலை காமாக்யா கோயிலுக்கு சென்று, அவர் சாமி தரிசனம் செய்தார். அமித் ஷா வருகையால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. Source link

2019 முதல் 2021ம் ஆண்டு வரை கலப்படம், போலி மருந்து சப்ளை செய்த 384 பேர் கைது; காம்பியா விவகாரத்துக்கு மத்தியில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை கலப்படம், போலி மருந்து சப்ளை செய்த விவகாரத்தில் 384 பேர் கைது செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அரியானாவைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த மருந்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் உலக சுகாதார நிறுவனமும், இந்திய நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து, இந்தியாவில்  விற்கப்படவில்லை … Read more

உ.பி: 2 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட காதலியின் எலும்புக்கூடு – காதலன் கைது

உத்தர பிரதேசத்தில் காதலியைக் கொன்று தனது அறைக்குள்ளேயே புதைத்து மறைத்த காதலனை 2 வருடங்களுக்குப் பின்பு போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திலுள்ள கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் பிக்ராம் சிங். இவருடைய 20 வயது மகள் குஷ்பு காணாமல் போய்விட்டதாக நவம்பர் 20, 2020 அன்று பிக்ராம் சிங் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில் பேரில் விசாரணை நடத்திய போலீசார் குஷ்புவின் காதலன் கௌரவின் மீது இந்திய சட்டப்பிரிவுகளான 363(கடத்தல்), 366 (கடத்தல், … Read more