Viral News: கணவனுக்கு முன்னாள் காதலியுடன் திருமணம் செய்து வைத்த காதலி!

ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம். ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக் மூலம் பிரபலமான அவர், சில ஆண்டுகளுக்கு முன் கடப்பாவைச் சேர்ந்த விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் டிக் டாக் வீடியோக்களில் நடித்து … Read more

கடற்படைக்கு 35 பிரம்மோஸ் வாங்க முடிவு: ரூ1700 கோடியில் ஒப்பந்தம்

புதுடெல்லி, செப். 24: கடற்படைக்கு ரூ.1,700 கோடி செலவில் 35 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் நவீனமயங்கள், கூடுதல் ஆயுதங்களுடன் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு, வெளிநாடுகளில் இருந்தும் நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் எஸ்-400 போன்ற ஏவுகணை தடுப்பு சாதனங்களும் இதில் அடங்கும். இந்நிலையில், கடற்படைக்கு 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்திய – ரஷ்யா கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்படுகிறது. இது, சூப்பர்சோனிக் … Read more

கேரளாவில் பிஎஃப்ஐ போராட்டத்தில் வன்முறை – உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கேரளா உட்பட 15 மாநிலங்களை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பிஎஃப்ஐ நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. எனினும் கேரளாவில் நேற்று அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அரசு பேருந்துகளும், ஆட்டோ, டாக்ஸிகளும் வழக்கம்போல் … Read more

வளர்ச்சி திட்டங்களை தடுக்க நகர்ப்புற நக்சலைட்கள் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அகமதாபாத்: ‘நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நகர்ப்புற நக்சலைட்கள் முடக்க முயற்சிக்கின்றனர்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் ஏக்தா நகரில்,  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். பின்னர், மாநாட்டில் அவர் பேசியதாவது: நகர்ப்புற நக்சல்களும், நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு எதிரானவர்களும் அரசியல் ஆதரவுடன் சர்தார் சரோவர் அணை கட்டும்  திட்டத்தினால் … Read more

பசுமை வளர்ச்சி, வேலைவாய்ப்பில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘பசுமை வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்பை உருவாக்குவதில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் களும் முடிந்தவரையில் முயற்சி கள் மேற்கொள்ள வேண்டும். பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் … Read more

வரமல்ல … சாபம்… ரூ 25 கோடி லாட்டரி வென்ற நபரின் புலம்பல்!

கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரியில், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ரூ.25 கோடி முதல் பரிசை வென்றதாக அனூப் அறிவிக்கப்பட்ட போது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எலையே இல்லை. ஆனால், ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் அனூப் தன இவ்வளவு பணம் வென்றதை நினைத்து வருந்துவதாகக் கூறுகிறார். “நான் மன அமைதியை இழந்துவிட்டேன், நான் எனது சொந்த வீட்டிற்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளேன். … Read more

மின் கட்டண உயர்வு வழக்கு; உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

புதுடெல்லி: மின் கட்டண உயர்வு வழக்கை தாமதிக்காமல் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி  தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்த வாரம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த தனி நீதிபதி, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரையில், மின் கட்டண … Read more

தன் பிள்ளையை போல் பார்க்க வேண்டிய சகோதரியின் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கையில் 100 ரூபாய் பணம்.. சிப்ஸ் கொடுத்த அவலம்!

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள தாம்ராத் காவல் நிலையத்திற்கு 11 வயது சிறுமிஸயின் தாய் புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “தூரத்து உறவினரான தம்பி முறை கொண்ட 31 வயது வாலிபர் ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர், வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் பாலியல் … Read more

பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பை தடை செய்ய முடிவு – கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சியினர் மக்களிடையே திட்டமிட்டு பிரிவினைவாதத்தை பரப்பி வருகின்றனர். கடலோர கர்நாடாகாவில் மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் அந்த கட்சியினரால் மத ரீதியான மோதல்கள் நடந்தேறி இருக்கின்றன. பெங்களூரு கலவரம், ஹிஜாப் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியிலும் அந்த கட்சியினரே … Read more

முல்லை பெரியாறில் 142 அடி நீர் நீங்கள் எப்படி கேட்க முடியும்?.. உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் 142 அடி நீரை தேக்க உத்தரவிடும்படி கோரிய பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவுக்கு நீரை தேக்கினால், தேவைப்படும் நேரத்தில் விவசாயிகளுக்கு அது உதவியாக இருக்கும். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அணையில் 142 அடிக்கு … Read more