காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிட இறுதியாக மறுத்துவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் நாளை முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால் … Read more

ஒலிம்பிக் கமிட்டி சட்ட திருத்தம் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முன்னாள் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகத்தை கலைக்கும்படியும், வரும் டிசம்பருக்குள் அதற்கு தேர்தல் நடத்தும்படியும் கடந்த 8ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டு கொண்டது. இல்லையென்றால், இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு … Read more

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. நாடு தழுவிய சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும். தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை … Read more

கணவனை கொல்ல மனைவியும் கள்ளகாதலனும் எப்படி எல்லாம் யோசிச்சி இருக்காங்க பாருங்க..!!

ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் சித்தகானி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (46). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு … Read more

டெல்லியில் காற்று மாசு அடைவதை தடுக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோதுமை பயிரிடப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் நெல் விதைக்கப்பட்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடைக்குப் பிறகு வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் டெல்லியில் … Read more

ஏபிஜி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,747 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: குஜராத்தின் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,747 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம், கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் தொழிலை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்றுள்ளது. வாங்கிய கடனை குறிப்பிட்ட நோக்கத்துக்காக  பயன்படுத்தாமல், வேறு வகைகளில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஏபிஜி நிறுவனத் தலைவரான ரிஷி … Read more

‘ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும்

டெல்லி: வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல … Read more

5 மாநில பேரவை தேர்தல் ரூ.340 கோடியை வாரி விட்ட பாஜ

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 340 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. உபி, பஞ்சாப்,    கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. பஞ்சாப்பை தவிர இதர மாநிலங்களில் பாஜ பெரும்பான்மையுடன்  ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. அதில், பாஜ 5 மாநிலங்களில் ரூ.344.27 கோடி செலவிட்டுள்ளது. காங்கிரஸ்  ரூ. 194.80 கோடி செலவிட்டுள்ளது. அதிகபட்சமாக … Read more

பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகி வீடுகளில் என்ஐஏ சோதனை – நாடு முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலப்மென்ட் பண்ட், கர்நாடகாவைச் சேர்ந்த … Read more

ராஜசேகர் ரெட்டி பெயரை சூட்டினார் ஜெகன் என்டிஆர் பல்கலை பெயர் இரவோடு இரவாக மாற்றம்: தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு

திருமலை: ஆந்திராவில் என்டிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பெயர் இரவோடு இரவாக ராஜசேகர் ரெட்டி பல்கலைக் கழகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் ‘டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகம்’ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பல்கலை கழகத்தின் பெயரை நேற்று முன்தினம் இரவோடு இரவாக, ‘டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்யா பல்கலைக் கழகம்,’ என்று முதல்வர் ஜெகன் மோகன் மாற்றம் செய்துள்ளார். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து துள்ளூர் காவல் … Read more