காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன்: சசிதரூர் பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று போட்டி வேட்பாளர் சசிதரூர் கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது. வரும் 8ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். வேட்பாளர்கள் இருவரும், வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சித் தலைமை மற்றும் … Read more

கேசிஆரின் திருமா பாலிடிக்ஸ்… 3வது அணியில் இப்படியொரு அரசியல் கணக்கு!

அக்டோபர் 5 பிற்பகல் சரியாக 1.19 மணி. ஹைதராபாத் நகரம் தொண்டர்கள் படையால் குலுங்க ”பாரத் ராஷ்டிர சமிதி” (BRS) என்ற அரசியல் கட்சியை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பெரிதாக அறியப்பட்ட முகங்கள் இல்லை. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என பார்த்தவுடன் அடையாளம் காண முடிந்தவர்கள் இருவர் தான். மற்றவர்கள் சிறிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். அதுவும் தேசிய … Read more

உத்தரபிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசத்தில் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் படுமடைந்தனர். டிவி எதனால் வெடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இமாச்சல் பிரதேசம்: ரூ.3,650 கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி.!

இமாச்சல் பிரதேசத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மொபைல் போன்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்ததாக பேச்சு. பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல் பயணம் மேற்கொண்ட நிலையில் காலை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து லுஹ்னூ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை திட்டம், மருத்துவ சாதன பூங்கா உள்ளிட்ட ரூ.3650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி … Read more

மெகபூபா முப்தி முன்வைத்த வீட்டுக் காவல் குற்றச்சாட்டு – ‘சுதந்திரமாக பயணிக்கலாம்’ என ஸ்ரீநகர் போலீசார் விளக்கம்  

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காஷ்மீர் வருகையின் காரணமாக, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீநகர் போலீசார், ‘நீங்கள் சுதந்திரமாக எங்கும் செல்லலாம்’ என்று பதிலளித்துள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது வீட்டின் கதவுகளில் பூட்டு போடப்பட்டிருக்கும் படம் ஒன்றினைப் பதிவிட்டு, “காஷ்மீரில் தான் … Read more

இனி TRS இல்ல… BRS ஆயிடுச்சு- தேசிய அரசியலுக்கு கே.சந்திரசேகர் ராவ் அச்சாரம்!

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்க களமிறங்கியுள்ளார். இதையொட்டி தனது மாநில அளவிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற அரசியல் கட்சியை மாற்றம் செய்து ”பாரத் ராஷ்டிரிய சமிதி” (BRS) எனப் பெயர் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விழாவிற்கு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், … Read more

பிரம்மோற்சவத்தின் 9ம் நாளான இன்று ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பத்கர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிம்மம், அன்னம், முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அலங்காரம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கஜ வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி … Read more

’’கட்சியை வழிநடத்த நிதிஷ்குமார் என்னை அழைத்தார்; ஆனால் .. ‘’ – பீகார் அரசியலில் பரப்பரப்பு

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தலைமையேற்று நடத்தவேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் தான் அதனை நிராகரித்து விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் 3,500 கிமீ தூரத்துக்கு ‘ஜன் சுராஜ்’ என்ற விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம் செய்து வருகிறார் பிரசாந்த் கிஷோர், இந்த நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர்,’ 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை அழைத்து உதவி கேட்டார். இதனையடுத்து 2015 … Read more

புதிதாக 10 பேரை தீவிரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி அமைப்பின் தலைவர் பிலால் அகமது பெய்க் ஆகியோர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி … Read more

விபரீதமான திருமண நிகழ்வு… உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 25 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம் துமாகோட் அடுத்த பிரோகால் பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்விற்காக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 45 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் பவுரி கர்வால் பகுதி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 25 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் … Read more