மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 1 இடங்களில் சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை (19.08.22) சோதனை நடத்தியது சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் … Read more

சுதந்திர தினத்தன்று பஞ்சாபில் வெடிகுண்டு வைத்தவன் சிக்கினான்

மும்பை:  பஞ்சாப்பில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அமிர்தசரசில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த போலீஸ்  எஸ்ஐ தில்பா சிங்கின் காரில் மர்ம நபர்கள் குண்டு வைத்தனர். இது   தொடர்பாக பஞ்சாப் போலீசார் டெல்லியில் 2 பேரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க  பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. மகாராஷ்டிராவுக்கும் இது வந்துள்ளது. அவர்களுடன் மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை  (ஏடிஎஸ்)  போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஷீரடியில் … Read more

நாசாவின் `ஆர்டிமெஸ்` நிலவு பயண திட்டத்தில் – இந்திய விஞ்ஞானி அமித் பாண்டே

நாசாவின் நிலவு பயண திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ‘அப்போலோ’ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ‘ஆர்டெமிஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் … Read more

ஒரே மாதத்தில் 60 லட்சம் பேருக்கு கொரோனா!!

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,61,290 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000ஐ நெருங்கியுள்ளது. ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஆளான 15 லட்சம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்குரிய … Read more

வீட்டில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிமினி வயல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் – லட்சுமி தம்பதிக்கு சரஸ்வதி, பிரியா (வயது 21) என்ற மகள்களும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரியா ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பமான அவர் 7 மாதத்தில், இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பிரியா உடலை கைப்பற்றி விசாரணை … Read more

முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை – கர்நாடக காங்கிரஸ் எம்எல்சி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாட காங்கிரஸ் எம்எல்சி ஹரிபிரசாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறைய பேர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். அரசியலில் இருந்து விலகி இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜக ஆட்சி மன்ற குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் எடியூரப்பா முக்கிய பங்கு வகிப்பார் என்பது உறுதியாகிவிட்டது. எனவே அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வாய்ப்பு இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை … Read more

வங்கிகள் தனியார்மயம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; காங்கிரஸ் காரசாரம்

புதுடெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்த அறிக்கையை நிராகரிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது, தனியார் மயமாக்குவது என ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை அதிகளவில் விரைவாக தனியார் மயமாக்குவது பேரழிவை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் – மருத்துவ குழு எச்சரிக்கை.!

சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ ஆய்வு இதழில், இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக கடும் காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் , 5 வயதுக்குட்பட்ட … Read more

தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில … Read more

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!

மும்பை அருகே ராய்காட் கடலில் கடந்த வியாழக்கிழமை ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என்று மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அதில் 2008ஆம் ஆண்டு நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் … Read more