ஏற்கனவே கொலை மிரட்டல் வந்த நிலையில் சல்மான் கானை கொல்ல மீண்டும் சதி: மற்றொரு குற்றவாளி திடுக் தகவல்

மொஹாலி: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், மற்றொரு கும்பல் மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப் பிரிவு தலைமையகத்தில் கடந்த மே 9ம் தேதி நடத்தப்பட்ட கையெறி வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அர்ஷ்தீப் என்பவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 19 வயதுடைய மற்றொரு தீவிரவாதியை டெல்லி … Read more

புற்றுநோயுடன் போராடினேன்: கவுதமி உருக்கம்

திருமலை: திருப்பதி மகதி அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதனை தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கவுதமி கலந்துகொண்டு பேசியதாவது: புற்றுநோய் விழிப்புணர்வு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் முக்கியமானது. வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமென்றாலும் புற்றுநோய் வரலாம். முறையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை … Read more

மாலத்தீவுக்கு பறந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடி திடீரென மாலத்தீவுக்கு பறந்து சென்றுள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடியாக நடித்தனர். இதில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சில காலம் டேட்டிங்கில் இருந்தனர். ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. இந்நிலையில் இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இது பற்றி கேட்டபோதெல்லாம் நாங்கள் நண்பர்கள்தான். எங்களுக்குள் காதல் இல்லை … Read more

வெளிநாட்டு போன் கால் மூலம் நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்

அமிர்தசரஸ்: வெளிநாட்டு போன் கால் மூலம் நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல் வந்ததால், போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.பஞ்சாபி நடிகையும், பாடகியுமான ஷானாஸ் கவுர் கில்லின் தந்தை சந்தோக் சிங்கின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு போன் அழைப்பில் இருந்து மர்ம நபர் ஒருவர் பேசினார். எதிர்முனையில் பேசிய அவர், ‘தீபாவளிக்கு முன்பாக உங்களது வீட்டிற்கு வந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடுவேன்’ என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சந்தோக் சிங், போலீசில் புகார் கொடுத்தார். … Read more

கோப்புகளில் கையெழுத்திட ரூ.300 கோடி லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு.. முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ விசாரணை!

2 கோப்புகளில் கையெழுத்திட, 300 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, மேகாலய முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக,  சத்யபால் மாலிக் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2019ம் ஆண்டு அக்டோபர் வரை பதவி வகித்தார். கடந்த 3ம் தேதியுடன் மேகாலய மாநில ஆளுநர் பதவியிலிருந்து சத்யபால் மாலிக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தபோது, 2 கோப்புகளில் கையெழுத்திட … Read more

அரியானா மருந்து கம்பெனி குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டது: காம்பியாவில் 60 குழந்தைகள் பலி பற்றி அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி : காம்பியாவில் 60 குழந்தைகளின் மரணத்துக்கான காரணமான கூறப்படும் மெய்டன் மருந்து கம்பெனி, தரம் குறைந்த மருந்துகளை தயாரிப்பதையே வழக்கமாக கொண்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் சிறுநீரக பாதிப்பால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது பற்றி ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, இந்தியாவை சேர்ந்த ‘மெய்டன் பார்மசூட்டிக்கல்’ நிறுவனத்தின் இருமல், ஜலதோஷ மருந்துகளை பயன்படுத்தியதால், இவர்களின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளது. … Read more

நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை என தேசிய ஊடகத்தில் வெளியான தகவல் – மத்திய அரசு விளக்கம்

நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நாடு முழுவதும் நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக அண்மையில் தேசிய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவின் எஸ்.ஐ.ஓ. உள்ளிட்ட மாநில சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஒரு மாதத்திற்கு மேலாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கால அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்துவதற்கு இது இடையூறாக இருக்கிறது என்று … Read more

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணியினரும் சிவசேனா கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதில் ‘எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்’ என ஏக்நாத் ஷிண்டே தரப்பு தலைமை தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து மனு அளித்தது. இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை … Read more

சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு பிரிவினரும் சிவசேனா கட்சியின் பெயரையும் சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது. இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அக்கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. … Read more

Breaking News: சிவ சேனா சின்னம் முடக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்த முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்களின் குழு, பாஜக இணைந்து, கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னவீஸ்சும் உள்ளனர். இந்நிலையில் மும்பை … Read more