தாஜா செய்யும் ஜனாதிபதி இந்தியாவுக்கு வேண்டாம்: காங். முன்னாள் எம்பி சர்ச்சை

புதுடெல்லி: ‘முர்முவை போல் ஜால்ரா தட்டும் ஜனாதிபதி, எந்த நாட்டுக்கும் கிடைக்கக் கூடாது,’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில்  80 சதவீதம் குஜராத்தில் செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த உப்பை சாப்பிடுகின்றனர்,’ என்றார். இதை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதியின் பேச்சு, பாஜ.வை தாஜா … Read more

பிரேக் போட்டு இருந்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் -வந்தே பாரத் ரயில் விபத்து!

கடந்த மாதம் 30ம் தேதியிலிருந்து குஜராத் – மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் சென்றடையும். மேலும் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் நவீன ரயில். குஜராத் காந்திநகரிலிருந்து மும்பைக்கு 6 – 7 மணி நேரத்துக்குள் சென்றடையும். இந்நிலையில், வந்தே பாரத் , ரயில் துவக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே விபத்தில் சிக்கியுள்ளது. வத்வா மற்றும் மணிநகர் ரயில் … Read more

ராமர், சீதா, ஹனுமன், ராவணனை தவறாக சித்தரித்ததாக புகார் – ‘ஆதி புருஷ்’ படத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் டீஸர் அக்டோபர் 2-ல் வெளி யான பிறகு அப்படத்துக்கு இந்து அமைப்பினரும் பாஜக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ராமர், சீதை, ஹனுமன் மற்றும் ராவணனை தவறாக சித்தரித்திருப்பதாக அவர்கள் கண்டித்துள்ளனர். பாகுபலி திரைப்படப் புகழ் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக உள்ள புராண காவியம் ‘ஆதி புருஷ்’. இத்திரைப்படத்தின் டீஸர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் … Read more

கர்நாடகாவில் களை கட்டும் ஒற்றுமை யாத்திரை ராகுலுடன் சோனியா உற்சாக நடை பயணம்: நாளை பிரியங்காவும் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்று உற்சாகமாக நடந்தார். இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை குமரியில் கடந்த மாதம் 7ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதொடங்கினார். தமிழகம், கேரளாவில் பயணத்தை முடித்து விட்டு தற்போது கர்நாடகாவில் நடை பயணம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் 21 நாட்களில் 521 கிமீ அவர் நடந்து சென்று மக்களை சந்திக்க உள்ளார். இந்த பாத யாத்திரையில் … Read more

குடியரசுத் தலைவருக்கு எதிராக விமர்சனம் – முன்னாள் எம்.பி.க்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: அண்மையில் குஜராத் சென்றிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் உப்பு உற்பத்தியில் 76 சதவீதத்தை குஜராத் பூர்த்தி செய்கிறது. குஜராத் உற்பத்தி செய்யும் உப்பை அனைத்து இந்தியர்களும் உட்கொள்கின்றனர்” என்றார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் எம்.பி. உதித் ராஜ் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உதித் ராஜுக்கு நோட்டீஸ் … Read more

ஏட்டிக்கு போட்டி பேரணி தாக்கரே 1 லட்சம் ஷிண்டே 2 லட்சம்: போலீஸ் புள்ளி விவரம்

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்  தாக்கரே நடத்திய ஏட்டிக்கு போட்டி  தசரா பேரணிகளில், ஷிண்டேவுக்கு 2 லட்சம் பேரும், தாக்கரேவுக்கு ஒரு லட்சம் பேரும் திரண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாைவ உடைத்து, பாஜ ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுத்து வருகிறார். உண்மையான சிவசேனா தாங்கள் தான் என்பதை நிரூபிக்க, இருவரும் தங்களின் தொண்டர்கள் பலத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் … Read more

மேற்கு வங்க ஆற்றில் திடீர் வெள்ளம் – 8 பேர் உயிரிழப்பு; பலர் காணவில்லை

கொல்கத்தா: வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின்போது வழிபட்ட துர்கா தேவி சிலைகளை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதன்படி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் மால் பஜார் என்ற இடத்தில் துர்கா சிலைகளை மால் ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 40 பேர் மீட்கப்பட்டனர். 8 வயது சிறுவன், 13 வயது சிறுமி உட்பட … Read more

திருப்பதி புஷ்ப யாகம் ஆன்லைனில் டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பங்கேற்க வரும் 10ம்  தேதி ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதம் ஸ்ரவணம் (திருவோணம்) நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. கோயிலுக்குள் நடைபெறும் புஷ்ப யாகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக வரும் 10ம் தேதி காலை … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயில், வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது. இதில், விரைவாக வந்த ரயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்து … Read more

கேரளாவில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்காரா நகரிலிருந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு கேரள அரசுப் பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இரவு 11.30 மணியளவில் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து மீது பின்னால் சென்ற தனியார் பள்ளியின் சுற்றுலா பேருந்து மோதியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு கூறும்போது, “அரசுப் பேருந்து மீது மோதியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் … Read more