தாயகம் திரும்பும் மியன்மாரில் சிக்கிய தமிழர்கள்!- நேரில் வரவேற்கிறார் செஞ்சி மஸ்தான்

மியன்மார் நாட்டில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர்களை வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்கிறார்.  மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்திருந்நது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் எழுதியிருந்தார். விசாரணையில், இவர்கள் … Read more

டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்தது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ‘வரும் 7-ம் தேதி டெல்லியில் … Read more

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை

லக்னோ: தனது துல்லியமான வியூகத்தால் இந்திய அரசியலில் தனி இடத்தைப்  பிடித்துள்ள பிரசாந்த் கிஷோர், தற்போது வெளிப்படையாகவே தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அதை அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து தொடங்கியுள்ளார். பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன் சூரஜ் பாதயாத்திரையைத் தொடங்கினார். காந்தி ஜெயந்தி அன்று மேற்கு சம்பாரானில் உள்ள பிதிஹார்வாவில் இருந்து தனது யாத்திரையைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோரின் இந்த பயணமும் ஒரு அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.  பீகார் அரசியலில் … Read more

4 மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு..!

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகா அமைதி நடவடிக்கையின் நிச்சயமற்ற தன்மையே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் 7 நாகா தேசிய அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.   Source link

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் மாலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 7 மணி வரை இணையதள சேவை தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா ஜம்மு காஷ்மீர் பயணம் எதிரொலி: தற்காலிகமாக முடங்கியது இணைய சேவை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் இணையதள சேவை வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக பதற்றம் நிறைந்த இடங்களில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறைத்துறை டிஜிபி, அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை … Read more

ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சீனாவின் வாங்ஜு நகருக்கு மஹன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்ப தாக ஈரான் அரசிடம் இருந்து இந்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் விமானப்படை தளங்களில் இருந்து சுகோய் ரக போர் விமானங்கள் விரைந்து சென்று ஈரான் பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பு அளித்தன. ஜெய்ப்பூர், சண்டிகரில் … Read more

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி எச்.கே.லோஹியா கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை..!

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி எச்.கே.லோஹியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். லோஹியாவின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட தகவலின்படி லோஹியாவின் வீட்டு உதவியாளர் ஒருவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. உதவியாளர் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Source link

டிஆர்எஸ் பொதுக்குழு கூடுகிறது புதிய தேசிய கட்சி நாளை அறிவிப்பு

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் சந்திரசேகரராவின் தேசிய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜவுடன் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பிரதமர்  மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   சந்திரசேகர ராவ் அவரை சந்திக்காமல் தவிர்த்தார். காங்கிரஸ், பாஜ அல்லாத கட்சிகள் அடங்கிய  கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர்  … Read more

உணவு தானியங்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நுகர்வோர் விவ காரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டில் மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு போதுமான அளவில் கையிருப்பு வைத்துள்ளது. மேலும், சந்தையில் கோதுமை, ஆட்டா மற்றும் அரிசி வகைகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலவரங்களை மத்திய அரசு தொடர்ந்து … Read more