காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் எம்.பி. திட்டம்..!!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு வர ராகுல்காந்தி மறுத்துவிட்டதால் மூத்த தலைவர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு கொண்டு வர சோனியா காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளம் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ள … Read more

'நீதிபதிகள் ஊழல்வாதிகள்' -பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இந்தியாவின் முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என பேட்டி அளித்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். தெஹல்கா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என கூறினார். இதனையடுத்து  2009ம் ஆண்டு அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிற்து. இந்நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்திரா பானர்ஜி … Read more

ட்விட்டரில் தரக்குறைவான விமர்சனம்: நடிகர் கமல் ரஷீத் கான் மும்பையில் கைது

மும்பை: கடந்த 2020 ஆம் ஆண்டு தரக்குறைவான விமர்சனங்களுடன் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பகிர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார். அவர் மீது யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ரஷீத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை மும்பை மலாட் போலீஸார் கைது செய்தனர். அவர் இன்று … Read more

2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளது: தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: 2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,717 கொலைகளும், பீகாரில் 1,799 கொலைகளும், மராட்டியத்தில் 2,330 கொலைகளும் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் 2021-ல் பஞ்சாப் முதலிடத்திலும், இமாச்சல், அருணாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

பாபர் மசூதி இடிப்பு: அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

பாபர் மசூதி இடிப்பை தடுக்க தவறிய அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். 1992ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் கோடிக்கணக்கு மதிப்பிலான பொதுச் சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இவை தவிர ஏராளமான பாலியல் வன்கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும் அரங்கேறியது. இந்நிலையில் இதனைத் தடுக்க தவறிய … Read more

வங்கி லாக்கரில் சிபிஐ சோதனை: மனைவியுடன் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வருகை

புதுடெல்லி: தனது வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மனைவியுடன் வங்கிக் கிளையில் ஆஜரானார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு … Read more

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு: காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா!

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காரணம் என்றும் குலாம் … Read more

கர்நாடக பாடப் புத்தகத்தில் சாவார்க்கர் – பறவையில் பறந்ததாக தகவல் – விளக்கமும், சர்ச்சையும்!

கடந்த 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள முகப்பை தேசியக் கொடியாக மாற்றுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்வைத்த ஓர் கேள்வி என்னவெனில், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்களா என்பதுதான்.?! ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவார்களா என்ற கேள்விக்கும், சாவார்க்கருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? தேசியத்தை வலியத் திணிக்கும் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இந்திய … Read more

பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் காலமானார்

டெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (72) காலமானார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக பொருளாதார பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 3-ம் இடம் பிடித்தார் அதானி.!

உலக பணக்காரர்கள் வரிசையில், 10.95 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் தரவரிசையில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடங்களுக்குள் வந்த ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார். உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாமிடத்திலும் உள்ளனர். Source link