தனியாக வரும் பெண்களுக்கு தங்கும் மையம்.. மாநில அரசு அறிவிப்பு..!

கேரளாவின் முக்கிய நகரங்களில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கும் வகையில், இலவச தங்கும் மையம் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முக்கிய நகரங்களில் ‘மையம் எனது கூடு’ என்ற பெயரில் அரசு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில், குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்கள் தங்கிக் கொள்ளலாம். இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக … Read more

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்: மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் … Read more

ஹரியானா குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து… மாலுக்குள் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதஹனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்தின் … Read more

12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் நாய் -தற்காப்புக்காக அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் நாயை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்காப்புக்காக அடித்துக்கொன்ற சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் ரக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து தப்பிய அந்த நாய் 5 கிராமங்களில் அலைந்துதிரிந்து 12 பேரை கடித்துக் குதறியது. டாங்கோ ஷா கிராமத்தில் இருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை சுற்றிவந்த நாய், வழியில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது. … Read more

கவலை வேண்டாம்… அம்பானி உறுதி – அனைவருக்கும் 5ஜி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தது. இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் மலிவான விலையில் டேட்டா என விரைவாகவே அனைவரின் வீட்டிற்குள்ளும் ஜியோ நுழைந்துவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் 5G இணையசேவையை பிரதமர் மோடி, இந்திய மொபைல் மாநாட்டில் (IMC) இன்று திறந்துவைத்தார். மேலும், 5G சேவைகள் சில நகரங்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து நகரங்களுக்கும், அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்கும் 5G இணைய … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

4ஜி கால்வாய் நீர் என்றால் 5ஜி ஆற்றுவெள்ளம் -5ஜி தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில், நாட்டின் மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை 5 ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தன. இவற்றைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, 5 ஜி தொடர்பான … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ரூட்டு க்ளியர்:

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அண்மையில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற கொள்கையைப் பின்பற்றுவது என்று முடிவு எட்டப்பட்டது. அதன்படி, தான் வகித்துவந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கார்கே நேற்றிரவே காங்கிரஸ் இடைக்காலத் … Read more

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவி: மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் சோனியா … Read more

திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாடு; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பன்யன் ரவீந்திரன் கட்சிக் … Read more