இன்று கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

திருமலை: இன்று கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் திருமலையில் உள்ள அனைத்து இடங்களும் வாகனங்களால் நிரம்பியுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் 3 முறை தடை செய்யப்பட்ட வரலாறு என்ன?

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்த நிலையில், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, … Read more

தாஜ்மஹாலைக் கட்டியது யார் எனக் கண்டறிய வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மனு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியதாகும். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளைத் திறக்க வேண்டும் எனவும், தாஜ்மஹாலை வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவித்ததை எதிர்த்தும், ரஜ்னீஷ் சிங் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான ஆதாரங்களைக் கேட்டு தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, அப்படி எவ்விதமான ஆதாரங்களும் இல்லை என NCERT பதிலளித்ததாக  ரஜ்னீஷ் சிங் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். … Read more

விண்ணை பிளந்த கோவிந்தா முழக்கம்!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கோலாகலம்.. 5ம் நாள் விழாவில் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடப்பதால் பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 5ம் நாள் விழாவில் நாச்சியார் திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் கிருஷ்ணரும், … Read more

நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்தின் 9 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 1958-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலத்தின் 9 மாவட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு ‘தொந்தரவுகள் நிறைந்த பகுதி’ என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவித்து வருகிறது. இந்தச் சட்டம் இன்று முதல் (அக்டோபர் 1-ம் தேதி) மார்ச் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். … Read more

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி … Read more

புதுச்சேரி: பொதுமக்களின் தொடர் புகார் எதிரொலி-55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கிய 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும்போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தைக் கூறி கடன் பெற்ற பொதுமக்களிடம், அதன்பின்னர் அதிக வட்டி, எந்த அறிவிப்பும் இல்லாத … Read more

இந்தியாவில் முதன்முதலாக 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5ஜி … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது சரியா, தவறா?

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு … Read more

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்: எந்த நகரங்களுக்கு முதலில் கிடைக்கும்?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. சுமார் 7 நாட்கள் நடைபெற்ற ஏலம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 … Read more