காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்த சதாம் சையத் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கவிதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதாம், கவிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் கவிதா மூச்சுத்திணறி … Read more

இருமாநில அட்டவணை அடுத்த மாதம் வெளியீடு; தேர்தல் ஆணைய குழு குஜராத் பயணம்: இமாச்சல் பிரதேசம் செல்லவும் திட்டம்

புதுடெல்லி: குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் வெளியிட உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தல் ஆணைய குழு இன்று குஜராத் செல்கிறது. குஜராத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. கேசுபாய் படேல் தொடங்கி, நரேந்திர மோடி (தற்போது பிரதமர்), ஆனந்திபென் படேல் (தற்போது உத்தரபிரதேச ஆளுநர்), விஜய் ரூபானி, பூபேந்திர படேல் (தற்போதைய குஜராத் முதல்வர்) ஆகியோர் முதல்வராக பதவி வகித்தனர். வரும் டிசம்பர் வாக்கில் குஜராத்தில் சட்டப் … Read more

10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்!!

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேச பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக மத்திய அரசு யூடியூப் சேனல்களை கண்காணித்து அவ்வப்போது முடக்கி வருகிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு … Read more

வெளியானது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தியா முழுவதும் 50 தேர்வு மையங்களில் மத்திய … Read more

உத்தராகண்டில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் தகனம்

டேராடூன்: இளம்பெண் கொலையை கண்டித்து உத்தராகண்டின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது. கொலையான இளம்பெண்ணின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா ரிஷிகேஷில் விடுதி நடத்தி வந்தார். அங்கு வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. போலீஸ் விசாரணையில் விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா … Read more

600 இமெயில், 80 போன் கால்… தொடர் முயற்சி – கிடைத்தது உலக வங்கி வேலை

‘வெற்றிக்கு குறுக்குவழி இல்லை’, ‘கடின உழைப்பால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’,’கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது’ போன்ற வாசகங்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால், இந்த 23 வயது இந்திய இளைஞரின் வாழ்வு, முன்கூறிய அத்தனை கருத்துகளையும் உண்மை என்பதை நிரூபிக்கிறது.  இந்தியாவை சேர்ந்த வத்சல் நஹாடா என்ற இளைஞர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக்கத்தில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தற்போது, அவருக்கு உலக வங்கியில் வேலை கிடைத்த அனுபவத்தை, தனது … Read more

போதைப் பொருள் கடத்தலை கண்டறிய இன்டர்போலுடன் ‘ஆபரேஷன் கருடா’ கைகோர்ப்பு: 8 நாடுகளின் கும்பலை பிடிக்க புதிய முயற்சி

புதுடெல்லி:  போதைப் பொருள் கடத்தலை கண்டறிய உருவாக்கப்பட்ட ஆபரேஷன் கருடா பிரிவானது, இனிமேல் இன்டர்போலுடன் இணைந்து குற்றவாளிகளை கண்டறியும் என்று ெடல்லி காவல்துறைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் இருந்து பல மாநிலங்களுக்கு போதைப் பொருள்  கடத்தப்படுவதால், அதனை கண்டறிந்து தடுப்பதற்காக ‘ஆபரேஷன் கருடா’ என்ற  அதிரடி பிரிவின் நோடல் அதிகாரியாக டெல்லி சிறப்புக் காவல் ஆணையர் (குற்றப்  பிரிவு) ரவீந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த ஆபரேஷன் கருடாவானது,  சிபிஐயுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும் அனைத்து … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா அஷோக் கெலாட்?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் வெளியேறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கிறது. போட்டி இருக்கும்பட்சத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி வாக்குப்பதிவு இருக்கும் என்றும், அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட … Read more

ஒடிசா மாநிலத்தில் வாழும் 62 பிரிவு பழங்குடி மக்கள் குறித்த கலைக் களஞ்சியத்தை வெளியிட்டார் முதல்வர் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வாழும் 62 பிரிவு பழங்குடி மக்கள் குறித்த கலைக் களஞ்சியத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். பழங்குடி மக்களின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் கலைக் களஞ்சியம் விளக்குகிறது.

மியான்மர் கடத்தல் எதிரொலி: வேலைவாய்ப்பு விளம்பரங்கள் இளைஞர்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: தாய்லாந்தில் வேலைக்கு சென்ற 200 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாக இந்திய இளைஞர்களைக் குறிவைத்து போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் கால் சென்டர் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. எனவே, சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்திய இளைஞர்கள் நம்பி ஏமாற … Read more