டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித் – யார் இவர்? பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் யு.யு.லலித், 74 நாட்கள் மட்டும் பதவி வகிக்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித், இன்று சனிக்கிழமை முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். யார் இந்த உதய் உமேஷ் லலித்? மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957இல் பிறந்த யு.யு.லலித், 1983ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பாபர் … Read more

பூகம்பத்தில் இறந்தவர்களின் நினைவாக அருங்காட்சியகம் – நாளை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: குஜராத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டிய ஸ்மிருதிவன் நினைவு கட்டிடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்க உள்ளார். குஜராத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அருங்காட்சியம் ஒன்று கட்டும் திட்டத்தை குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடிஅறிவித்தார். இந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது அந்த அருங்காட்சியகம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த … Read more

தேசியக் கொடியில் ‘மேட் இன் சைனா’: அன்றே சொன்ன ராகுல் காந்தி!

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. 65 ஆவது சர்வதேச மாநாட்டில் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடானது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இடம்பெற்ற பேரணியில் இந்திய சபாநாயகர்கள் குழுவினர் கையில் … Read more

இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை அறிமுகம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2023-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் செல்லும் பிரதமர் மோடி -2 நாள் பயணம்.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மற்றும் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். நாளை காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) பதவியேற்றுக் கொண்டார்ர். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியை வகிப்பார். அத்துடன் அவருக்கு 65 வயதாவதால் அவர் ஓய்வு பெறுவார். முன்னதாக நேற்று உச்ச … Read more

'ஆட்சியில் எந்த தலையீடும் இல்லை; சுதந்திரமாக செயல்படுகிறேன்!' – முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக மாநில அரசில் எந்த தலையீடும் இல்லை என்றும், சுதந்திரமாக செயல்பட கட்சி மேலிடம் அனுமதி வழங்கி உள்ளது என்றும் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா, வயது மூப்பு காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கர்நாடக மாநிலத்தின் 23வது … Read more

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது யு.யு.லலித் பதிவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், … Read more

சோனாலி போகட் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? – கோவா கிளப் உரிமையாளர் கைது

சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவா போலீசார் … Read more