ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்.6-ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. 8-ம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

நாட்டில் உள்ள 744 மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனை – திருப்பதி தேசிய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

திருப்பதி: நாட்டில் உள்ள 744 மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனை சேவை விரிவாக்கம் செய்யப்படுமென தேசிய தொழிலாளர் நல மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பதியில் 2 நாள் தேசிய தொழிலாளர் நல மாநாடு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்தது. இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமையன்று, காணொலி முலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்நிலையில், 2-ம் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? – குலாம் நபி ஆசாத்தின் 5 பக்க கடிதம் விரிவாக…

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 1953 ஆகஸ்ட் 8-ம் தேதி ஷேக் முகமது அப்துல்லா கைது செய்யப்பட்டார். அப்போது காஷ்மீரில் காங்கிரஸுக்கு நன்மதிப்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் கடந்த 1970 -ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தேன். சுதந்திர போராட்ட காலத்தில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே மகாத்மா காந்தி, நேரு, … Read more

ஒரே நாடு; ஒரே உரம் திட்டம் உர மூட்டைகளில் ‘பாரத்’ கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின்படி,  உர மூட்டைகளில் ‘பாரத்’ பெயரை கட்டாயமாக அச்சிடும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என அனைத்து திட்டங்களையும்  ‘ஒரே நாடு’ திட்டத்தின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முயல்கிறது. இந்நிலையில், ஒன்றிய  உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வருமாறு:* நாடு முழுவதும் உர உற்பத்தி நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொது பெயரிலேயே உரத்தை விற்க … Read more

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி … Read more

இலவசத் திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

இலவசத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகள் பட்ஜெட் தொகையில் ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் , இலவசத் திட்டங்களின் சுமையை மற்றவர்கள் மீது மாநில அரசுகள் சுமத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகள் அதனால் ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைக்கும் போது தங்கள் பட்ஜெட்டில் இலவசத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று … Read more

8 ஆண்டில் 277 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கியது மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன் பாஜ: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: ‘மாநில அரசுகளை கொல்லும் சீரியல் கொலைகாரனாக பாஜ செயல்படுகிறது,’ என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக, இக்கட்சி எம்எல்ஏ.க்களுக்கு பாஜ தலா ரூ.20 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி விவாதிப்பதற்காக, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கெஜ்ரிவால்: ‘ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், இதுவரையில் கோவா, கர்நாடகா, … Read more

இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பி கொள்ளக்கூடாது – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவை என்பதால் தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேரலையில் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளால் அந்த தேசம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதாகவும், எனவே வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் இதுபோன்ற தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் … Read more

ஆண், பெண் ஓட்டுநர்கள் அவதி ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள்: கருத்து கேட்கிறது ரயில்வே

புதுடெல்லி: ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள் பொருத்துவது குறித்து, அதன் ஓட்டுநர்களிடம் ரயில்வே வாரியம் கருத்து கேட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 14 ஆயிரம் டீசல் – எலக்ட்ரிக் இன்ஜின்கள் உள்ளன. இதில், 1,000 பெண்கள் உள்பட 60 ஆயிரம் பேர் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் இன்ஜின்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதையை கழிப்பதில் பெரும் சிரமம் அடைகின்றனர். ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது சுரேஷ் பிரபு ரயில்வே … Read more

அமெரிக்க இணை நிதியமைச்சருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

புதுடெல்லி: உலக பொருளாதார நிலவரம் குறித்து அமெரிக்க நிதித் துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: 2023-ல் ஜி20 நாடுகளின் அமைப்பில் இ்ந்தியாவின் தலைமை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க நிதி துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், உலகப் பொருளாதார நிலவரங்கள், இந்திய-அமெரிக்க இடையேயான உறவில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் … Read more