சோனியா காந்தியுடன் விரைவில் நிதிஷ், லாலு சந்திப்பு- தேஜஸ்வி யாதவ் தகவல்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணிக் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் விரைவில் சோனியா காந்தியை சந்திப்பார்கள் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நாம் ஒவ்வொரு எதிர்க்கட்சியினரையும் ஒன்றிணைக்க வேண்டும். சோனியா காந்தி இந்தியா திரும்பி வந்ததும் ஒரு சந்திப்பு இருக்கும். அவரை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக சென்று சந்திப்பார்கள். நாங்கள் அனைத்து எதிர்gகட்சியினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்” என்றார். பிஹார் … Read more

ஆர்எஸ்எஸ் டவுசரில் தீ வச்ச காங்கிரஸ்: மக்களவைத் தேர்தலுக்கு புது ரூட்டில் பயணம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் மக்களை ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். பாரத் ஜூடோ யாத்திரை என்று கூறப்படும் ஒற்றுமையின் யாத்திரையை மேற்கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் இது குறித்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். நடை பயணத்தில் விலையுயர்ந்த சொகுசு கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சமூக வலைதளங்களில் … Read more

திருப்பதி நகரில் தூய்மை, பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை-மாநகராட்சி ஆணையாளர் தகவல்

திருப்பதி :  திருப்பதி நகரில் தூய்மைக்கு அதிக முன்னுரிமை அளிப்பதுடன், பொது சுகாதாரத்துக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி தெரிவித்துள்ளார். திருப்பதி மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வகையான மருத்துவ வசதிகளும் உள்ளன. நகரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அத்தியாவசிய மகப்பேறு, எலும்பு மற்றும் கண் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான … Read more

லடாக்கில் சிந்து நதியின் மீது புதிய பாலம் அமைத்த இந்திய ராணுவம்! வைரல் வீடியோ!

லடாக்கில் சிந்து நதியின் மீது இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழுவினர் பாலம் ஒன்றை அமைத்துள்ளனர். லடாக் செக்டாரில் பாயும் சிந்து நதியின் மீது, ராணுவத்தின் கனரக வாகனங்கள் செல்லும்வகையில் பாலம் அமைக்க பொறியாளர்கள் திட்டமிட்டு வந்தனர். இதற்காக புதிய தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்து வந்தனர். இதன் பலனாக, கண்டெய்னர் அளவுக்கு இரும்புத்துண்டுகளை பிரத்யேகமாக வடிவமைத்தனர். <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/PWYZHn1UIGg” title=”சிந்து நதியின் மீது வாகனங்கள் செல்ல பாலம் அமைத்த ராணுவம்” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; … Read more

வட இந்தியாவில் 'கேங்ஸ்டர்' வேட்டை: 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுடெல்லி: வட இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எதற்காக இந்த சோதனை? பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் உள்ளூர் கேங்க்ஸ்டர் கும்பலான லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலுக்கும், கோல்டி ப்ரார் கும்பலுக்கும் இடையே நிலவிய போட்டிதான் காரணம் என்று கூறப்பட்டது. … Read more

திருப்பதியில் எடை போடுவதில் முறைகேடு 14 இறைச்சி கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு-திடீர் சோதனையில் அதிகாரிகள் அதிரடி

திருப்பதி :  திருப்பதி நகரில் நுகர்வோரை ஏமாற்றி சிக்கன், மட்டன், மீன், இறைச்சி கடைகளில் எடை குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 14 பேர் மீது விஜிலென்ஸ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதியில் லீலாமஹால், சீனிவாசபுரம் மீன், சிக்கன் மட்டன் கடைகளை எடை குறைவாக வழங்கி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதனை அடுத்து மாநில விஜிலென்ஸ் அமலாக்கத்துறை  உத்தரவின் பேரில் திருப்பதி விஜிலென்ஸ் அமலாக்க … Read more

ஏலத்துக்கு வருகிறது பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள்! கிடைக்கும் தொகை இதற்கு பயன்படுமாம்!

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வருகிற 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட இருக்கின்றன. பிரதமர் மோடி செல்லும் பயணங்கள் மற்றும் கலந்துகொள்ளும் விழாக்களில் அவருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் அவ்வப்போது ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கி வருகிறார். அதன்படி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் www.pmmementos.gov.in என்ற இணைய தளத்தில் வருகிற 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் … Read more

வரதட்சணையை ஊக்குவிப்பதா? – கட்கரியை விளாசும் நெட்டிசன்கள்

புதுடெல்லி: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காரில் ஏர் பேக்-ன் அவசியத்தையும், ஆறு ஏர்பேக்களை ஊக்குவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருந்த சாலை பாதுகாப்பு விளம்பரம் ஒன்றினை வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் … Read more

நடிகை சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த மாதம் 22-ம் தேதி கோவாவில் மர்மான முறையில் சோனாலி போகத் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் சோனாலி உடலில் காயங்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோனாலி போகத் கொலை வழக்கில் அவரது நண்பரும், உதவியாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

கேரளா: 50 அடி பள்ளத்தில் மொத்தமாக கழிழ்ந்த பேருந்து… 20 பேர் படுகாயம்; ஒருவர் உயிரிழப்பு

மூணாறு அருகே கேரள அரசுப் பேருந்து 50 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து, 60 பயணிகளுடன் கேரள அரசுப் பேருந்து எர்ணாகுளம் கிளம்பியது. அப்போது மூணாறு அருகே சாக்கோச்சன் வாலியில் சென்றபோது பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து அடிமைலி போலீஸார், … Read more