குஜராத் செல்லும் பிரதமர் மோடி -2 நாள் பயணம்.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மற்றும் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். நாளை காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) பதவியேற்றுக் கொண்டார்ர். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியை வகிப்பார். அத்துடன் அவருக்கு 65 வயதாவதால் அவர் ஓய்வு பெறுவார். முன்னதாக நேற்று உச்ச … Read more

'ஆட்சியில் எந்த தலையீடும் இல்லை; சுதந்திரமாக செயல்படுகிறேன்!' – முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக மாநில அரசில் எந்த தலையீடும் இல்லை என்றும், சுதந்திரமாக செயல்பட கட்சி மேலிடம் அனுமதி வழங்கி உள்ளது என்றும் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா, வயது மூப்பு காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கர்நாடக மாநிலத்தின் 23வது … Read more

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது யு.யு.லலித் பதிவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், … Read more

சோனாலி போகட் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? – கோவா கிளப் உரிமையாளர் கைது

சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவா போலீசார் … Read more

ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள்வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். வரும் 2027-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்த மாநிலமாக ஆந்திரா இருக்கும் என அவர் உறுதி அளித்தார். ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சி யில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது, திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் … Read more

உச்ச நீதிமன்ற 49வது தலைமை நீதிபதி: பதவியேற்றார் உதய் உமேஷ் லலித்

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றார். உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித் என்பவரை நியமிக்க, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு, என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் … Read more

கேரளாவில் சோதனை சர்ச்சை விவகாரத்தில் மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு

கேரளா; சோதனை சர்ச்சை விவகாரத்தில் கொல்லத்தில் 6 இடங்களில் மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7-ல் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் 6 இடங்களில் மறுதேர்வு நடைபெறவுள்ளது.

பெண் ஓட்டுநர்களுக்கு ரயில் இன்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பரிசீலனை

புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சகத்தில் ஆண் இன்ஜின் டிரைவர்களைப் போலவே, ஏராளமான பெண் இன்ஜின் டிரைவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பணி நேரத்தின்போது போதுமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பெண் இன்ஜின் டிரைவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில் கழிப்பறைகளை … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். தலைமை நீதிபதியாக பதவியேற்ற லலித்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிராமாணம் செய்து வைத்தார். 2014-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், வழக்கறிஞராக இருந்து தலைமை நீதிபதியாகும் 2-வது நபர் ஆவார்.