பிரபல யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சியில் சப்ஸ்கிரைபர்ஸ்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 1.64 மில்லியன் பேர் ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அபியுதய் மிஸ்ரா போபாலில் இருந்து 122 கிமீ தொலைவில் உள்ள சோஹாக்பூர் அருகே மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது பைக் மீது லாரி ஒன்று  மோதியது. இந்த விபத்தில் சிக்கி அபியுதய் மிஸ்ரா உயிரிழந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவு செய்தியை அறிந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.