அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா(Rewa) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா(Janardan Mishra). இவர் கடந்த 22-ம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட கஜூஹா என்ற பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மரம் நடு விழாவில் பங்கேற்றார். அப்போது பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்த எம்.பி கழிவறை அசுத்தமாக இருப்பதை கண்டு வேதனையடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், கையுறை, பிரஷ்கள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். … Read more