வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை
டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.