ஆந்திர முதல்வர் சொந்த மாவட்டத்தில் சேறும், சகதியுமான சாலையில் கவுன்சிலர் அங்க பிரதட்சணம்

திருமலை: ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சாலை வசதி கேட்டு வார்டு கவுன்சிலர் ஒருவர் சேறும், சகதியுமான சாலையில் அங்க பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம் சொமிரெட்டிப்பள்ளி பஞ்சாயத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனை சரி செய்து சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. … Read more

பீகார்: 5 காவலர்களை லாக்-அப்பில் அடைத்து வைத்த எஸ்.பி! காரணம் என்ன?

பீகாரில் 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி. லாக் – அப்பில் வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா பதிவான வழக்குகளை மறுஆய்வு செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா அதிருப்தி அடைந்தார். இதற்காக அந்த … Read more

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து வாங்குவதில் முறைகேடு.. சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதியளித்துள்ளார். CNG தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடர்பான குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து அமைச்சரை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தலைமை செயலர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் அனுப்பிய அறிக்கையில், ஒப்பந்தத்தில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும்,கொள்முதல் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்து விசாரணை … Read more

என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர … Read more

வீடியோ: ”க்ளினிக்கை திறக்க இவ்வளவு நேரமா?” : கதவை உடைத்து டாக்டரை கடுமையாக தாக்கிய மக்கள்!

குறித்த நேரத்தில் க்ளினிக்கை திறக்காததால் வீடு புகுந்து மருத்துவரையும் அவரது மகனையும் நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்கள் தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் அனைத்தும் மருத்துவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. மகாராஷ்டிராவின் பாரமதியில் உள்ள சங்கவி என்ற பகுதியில் தனது வீட்டிற்கு அருகிலேயே ஆயுர்வேத க்ளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் யுவ்ராஜ் கெயிக்வாட். … Read more

தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள அமீர்கான் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினர். பணம் எண்ணும் எந்திரங்களைக் … Read more

அடேங்கப்பா… கேரளாவில் ஒரு பூசணிக்காய் ரூ47,000க்கு ஏலம்

மூணாறு: கேரளாவில் ஒரு பூசணி ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாட்களில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பொது ஏலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை மக்கள் ஏலம் விடுவர். நேற்று முன்தினம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டத்தை அடுத்த செம்மண்ணாற்றில் ஊராட்சி நிர்வாகம் … Read more

"புஷ்பா'னா ப்ளவர்'னு நெனச்சியா ஃபயர் டா".. சைமா விருதுகளை அள்ளிய ‘புஷ்பா’!

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கு திரையுலகில், அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA – South Indian International Movie Awards) விழா. தேசிய விருதைப் போன்று, இந்த விருதும் திரையுலகில் … Read more

நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

அகமதாபாத்: ‘நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒன்றிய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய ஜெய்ஜவான், ஜெய்கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் என்ற மந்திரத்தோடு முன்னேறி வருகின்றது. இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதற்கு … Read more

“வெளிப்படைத்தன்மை வேண்டும்”.. 5 எம்பிக்கள் கடிதம்.. காங். தலைவர் தேர்தலில் புதிய அறிவிப்பு

5 எம்.பி.க்களின் கடிதம் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வாக்களிப்போரின் பட்டியல் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 9,000 நிர்வாகிகள் வாக்களிப்பார்கள் என்றும் அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் … Read more