இந்தியாவில் 60% யானை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘ஆசியாவில் வசிக்கும் யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன,’ என்று உலக யானை தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச யானைகள் தினம் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் யானைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாக்கும் நமது நடவடிக்கைகளை அதிகரிக்க … Read more

தேசிய கொடி விற்பனையில் சாதனை படைத்த தபால் நிலையங்கள்..!- வசூல் எவ்வளவு தெரியுமா..?

வருகின்ற 75வது சுதந்திரத்தினை முன்னிட்டு இந்தியர்கள் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டர். இந்நிலையில் பாஜக ஆதரவாளர்கள் பலர் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். இதற்கு எதிராகவும் பலர் சமூக ஊடங்களில் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். தேசிய கொடியை தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுப்பு வெளியானது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக … Read more

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங் போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

ரூ.20 கூடுதலாக வசூலித்த ரயில்வே: 22 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் வென்ற உ.பி வழக்கறிஞர்

மதுரா: பயண கட்டணத்தில் ரூ.20 கூடுதலாக வசூலித்த இந்திய ரயில்வேவுக்கு எதிரான வழக்கில் சுமார் 22 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் வழக்கறிஞர் ஒருவர். அது குறித்து சற்று விரிவாக பார்ப்போம். கடந்த 1999 வாக்கில் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து மொராதாபாத் செல்லும் நோக்கில் இரண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார் வழக்கறிஞரான துக்கநாத் சதுர்வேதி. அவரது இரண்டு டிக்கெட்டுக்குமான பயண கட்டணம் ரூ.70. அதற்கான ரசீதும் … Read more

மருமகளின் தலையை வெட்டிய மாமியார் ..! – ஆந்திராவில் வெறிச்செயல்..!

எல்லா கால கட்டத்திலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வப்போது சில பல பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவில் மருமகளின் தலையை துண்டிக்கும் அளவிற்கு மாமியார் மருமகள் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது . ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. சுப்பம்மாவின் மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசுந்தரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் சுப்பம்மா, வசுந்தரா இடையே சண்டை ஏற்பட்டதால் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள 11 மாநில தேர்தல்களில் காங்கிரசின் வியூகம் என்ன?… அரையிறுதி போட்டிகளை எதிர்கொள்ள பீகார் பார்முலா உதவுமா?

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 11 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், பீகார் பார்முலாவை பயன்படுத்தி ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு  முன்பாக இமாச்சலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டத்துக்கு சென்றுள்ளன. அந்த வகையில் பீகாரில் நடந்த … Read more

துணை மருத்துவ படிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

தமிழகத்தில், 2022 – 2023-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. அதேபோல், பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது, இம்மாதம் 1-ம் தேதி துவங்கியது. இதுவரை, 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். … Read more

ஆவின் பால் பாக்கெட்களில்.. அமைச்சர் சொன்ன தகவல்..!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக் கொடி சின்னம் பதித்து விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்த வில்லை என பால் முகவர் பொன்னுசாமி கூறியுள்ளார். பொன்னுசாமி, சங்கத் தலைவரே கிடையாது. அவர் கேள்வி கேட்கவே தகுதி … Read more

ஒரே நாடு… ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது ‘கியூட்’ தேர்வுடன் ‘நீட்’ – ‘ஜேஇஇ’ தேர்வுகள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் திருப்பம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதால் கல்வித் துறையில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்புள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ‘கியூட்’ (CUTE) நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயம். நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் … Read more

இவர்களுக்கும் ஓய்வூதியம்.. தமாகா தலைவர் கோரிக்கை..!

“தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில், தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் … Read more