'காங்கிரசுக்கு இப்படிப்பட்ட ஒருவர் தான் தலைமையேற்க வேண்டும்' – பிரித்விராஜ் சவான் விருப்பம்!
காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்கக் கூடாது என்றும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்றும் பிரித்விராஜ் சவான் தெரிவித்து உள்ளார். நாட்டின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்தத் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் ராஜினாமா அக்கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. … Read more