கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்..சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 தலைகள் கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு … Read more

`தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்கின்றீர்கள்'- தமிழக அரசுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம் ஆத் ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் `இத்தகைய மனுவை அரசு தாக்கல் … Read more

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. 3 மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலி..!

ஆந்திராவில், பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சகிலேறு ஆற்றில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14), சுவர்ண கமலா(14), கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைத் தேடத் தொடங்கினர். நீண்ட நேர … Read more

திருப்பதி-திருமலை இடையே 50 பேட்டரி பேருந்து சேவை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

திருப்பதி: திருப்பதி – திருமலை இடையே போக்குவரத்து வசதி காலத்துக்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில் நேற்று முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். சுயம்புவாக திருமலையில் குடிகொண்டுள்ள திருமாலை முடியாட்சி காலம் முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசித்து வருகின்றனர். முதன்முதலில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை மட்டுமே இருந்துள்ளது. இந்தப் பாதைகள் வழியாக சிறுவர்கள் முதற்கொண்டு, பெரியவர்கள் வரை நடந்தே திருமலைக்கு சென்று, அங்கேயே இரண்டொரு நாட்கள் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவானது எப்படி? ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பல்வேறு ஊர்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் என் ஐ ஏ நடத்தும் மிகப் பெரிய சோதனை இதுதான் என்றும் கூறப்பட்டது. என் ஐ ஏ மட்டுமல்லாமல் அமலாக்கத்துறையும் சோதனைகளை முடுக்கிவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட … Read more

சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி

டெல்லி : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரயில்வே முறைகேடு வழக்கில் ஜாமீனிலுள்ள அவர் அக்.10-25 வரை சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார்.

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, … Read more

பஞ்சாப் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரி பகவந்த் மான் தீர்மானம் தாக்கல்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 92, காங்கிரஸ் கட்சிக்கு 18, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 3, பாஜகவுக்கு 2, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ உள்ளனர். இந்நிலையில், தனது கட்சி எம்எல்ஏ-க்கள் 10 பேரிடம் தலா ரூ.25 கோடிக்கு பேரம் பேசி ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்கும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ முயற்சியில் பாஜக, ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதேபோன்ற குற்றச்சாட்டை … Read more

பி.எஃப்.ஐ கூடவே மாட்டிக் கொண்ட 8 அமைப்புகள்… ஆக்‌ஷனில் மத்திய அரசு!

கடந்த சில நாட்களாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்த செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடியான ரெய்டு, கைது நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் என அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பி.எஃப்.ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனுடன் தொடர்பில் இருக்கும் அல்லது சார்ந்து … Read more

ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டம்

டெல்லி : ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தடையை அடுத்த பி.எஃப்.ஐ. தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறியுள்ளார்.