கியூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

டெல்லி: முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

12 மணி நேர போராட்டத்தில் ‘கொரில்லா தாக்குதல்’ நடத்தியது பிஎஃப்ஐ: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘‘கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்’ நடத்திய போது, முகமூடி அணிந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் கொரில்லா தாக்குதல் நடத்தினர்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது, தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து அனுப்புவது போன்ற குற்றச்சாட்டின் கீழ் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினர் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு … Read more

பதவியேற்ற பின் முதன் முறையாக ஜனாதிபதி முர்மு கர்நாடகா பயணம்: இன்று தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பதவியேற்ற பின்னர் முதன் முறையாக கர்நாடகா மாநிலத்திற்கு இன்று செல்கிறார். தொடர்ந்து தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். இந்திய குடியரசுத் தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் திரவுபதி முர்மு பதவியேற்றார். அவர் அரசு முறைப் பயணமாக முதன்முறையாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக லண்டன் சென்று வந்தார். நாடு முழுவதும் எந்த மாநிலத்திற்கும் செல்லாத நிலையில், முதன் முறையாக இன்று இரண்டு நாள் பயணமாக கர்நாடகா … Read more

மைசூர் தசரா திருவிழா: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்

மைசூரு: நவராத்திரி தொடங்கியதை அடுத்து கர்நாடகாவின் மைசூரில் தசரா திருவிழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார். சக்தியை வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் மைசூர் மாநகரில் நவராத்திரி விழா, தசரா திருவிழா என்ற பெயரில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கட்டுப்பாடுகளுடனே கொண்டாடப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் தசரா திருவிழா கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. குடியரசுத் … Read more

பெங்களூருவில் விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை விவகாரம்: 6 விமானப்படை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது கர்நாடகா போலீஸ்

பெங்களூரு: விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெங்களூர் விமானப்படை பயிற்சி கல்லூரியின் 6 விமானப்படை அதிகாரிகள் மீது, கர்நாடகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த அங்கிங் குமார் ஜா என்ற இளைஞர், விமானப்படைக்கு தேர்வானதை அடுத்து, பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில், பயிற்சி வீரராக இருந்து வந்தார். அங்கிங் குமார் ஜா, பயிற்சியின்போது விதிமுறைகளை மீறியதாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. … Read more

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.5% உயரப் போகிறதா ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள்?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்தது. இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1.4 விழுக்காடு உயர்த்தியது. இருப்பினும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், … Read more

குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சிக்கு பெயர் ‘ஜனநாயக சுதந்திர கட்சி’

ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தனது கட்சிக்கு ‘ஜனநாயக சுதந்திர கட்சி’ என பெயரிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது புதிய கட்சி வெளி தாக்கங்களால் பாதிக்கப்படாத சுதந்திரமான மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சியாக இயங்கும் என தெரிவித்துள்ளார். தனது கட்சியில் இணைவதற்கு வயது வரம்பு இல்லை என தெரிவித்த குலாம் நபி ஆசாத், இளைஞர்களும் மூத்தவர்களும் இணைந்த கட்சியாக இது இருக்கும் … Read more

ஜனநாயக ஆசாத் கட்சி..! – புதுக்கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம், அக்கட்சியில் இருந்து விலகினார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார். “கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம்” என்று குலாம் … Read more

உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது நீரில் மூழ்கிய புல்டோசர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்

முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது புல்டோசர் நீரில் மூழ்கிய நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கால்வாய் பாலம் சேதமடைந்து இருந்ததால், புல்டோசர் மூலம் கட்டமைப்பின் மற்ற பகுதிகள் இடிக்கப்பட்டன. கங்கையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போது கங்கை நதியின் கால்வாயின் ஒருபக்கத்தில் இருந்து புல்டோசர் மூலம் பாலத்தின் மற்றொரு பகுதி இடித்து தகர்க்கப்பட்டது. திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் புல்டோசர் தலைக்குப்புற … Read more

கர்நாடகா டூ கன்னியாகுமரி: காந்தி வேடமிட்டு விழிப்புணர்வு பாத யாத்திரை செல்லும் முதியவர்

கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரிக்கு காந்தி போல் வேடமிட்டு வந்த முதியவர் விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தார். காந்திய கருத்துகளைக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முத்தண்ணா என்பவர் விருதுநகர் வந்தார். கர்நாடகாவிலிருந்து கடந்த 9 ஆம் தேதி துவங்கிய பாத யாத்திரையாக காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி சென்றடைகிறார். இதையடுத்து பாத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரையிலிருந்து விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் … Read more