ரயிலில் இருந்து நூலிழையில் உயிர்தப்பும் பெண்ணின் பதைபதைக்கும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் Firozabad,ல் பெண் ஒருவர் ரயில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த பெண் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கி சென்றுள்ளார். நடைமேடையில் ஏறுவதற்கு அந்த பெண் முயன்ற போது உடனே ஏற முடியவில்லை. இந்நிலையில் அந்த தண்டவாளத்தில் விரைவு ரயில் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த து. இதனைக் கண்ட ரயில்வே போலீசார் ஒருவர் ஓடிச் சென்று அந்த பெண்ணை தூக்கி நடைமேடையில் ஏற்றி … Read more

ராகுல் அணிந்த டி சர்ட் ரூ41 ஆயிரம்: இணையத்தில் வைரலாகும் பதிவுகள்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி நடத்தி வருகிறார். இவர், காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம். … Read more

'26/11 மும்பை தாக்குதலில் எனது மகன்கள், மனைவியை இழந்தேன்' -தாஜ் ஹோட்டல் மேலாளர் உருக்கம்

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தாஜ் ஹோட்டல் பொதுமேலாளர் கரம்பிர் காங்கின் இரு மகன்கள் மற்றும் மனைவி கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபை நேற்று நியூயார்க்கில் வைத்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கடந்த 2008இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலின் பொது மேலாளராக இருந்த கரம்பிர் காங்கிங்கும் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”26/11 மும்பை தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம் … Read more

மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் இருசக்கரவாகனம் மீது மோதி விபத்து… சுமார் 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

மகராஷ்டிராவில், கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாக்பூரின் சக்கர்தாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், 4 பேர் சுமார் 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

இலங்கை கடற்படைக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, ‘இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடிவிக்கபட்டார்களா?’ என நீதிபதி கேட்டார். அதற்கு, ‘86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. … Read more

திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்: செப்.,27இல் சூப்பர் தொடக்கம்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் அளித்துள்ளார். திருப்பதியில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவின் முதல் நாள் ஆந்திர அரசு சார்பில் … Read more

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சுமார் 18 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு பிறகு 118 மாவட்டங்களில் 37 சதவீதம் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  பயிர்கள்அழிந்ததால் பொருளாதார இழப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அருணாச்சல எல்லையில் வீரர்களுக்கு நவீன ஆயுதம்: ஹெலிகாப்டர் இறங்க வசதி

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச எல்லை பகுதிகளில் சீனாவின் ராணுவ நடவடிக்கை அதிகமாகி வருவதால், அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய ராணுவமும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு அருணாச்சல பிரதேச எல்லைகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள், இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ நிலைகள் அனைத்தும், ஆப்டிகல் பைபர் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு சீனாவின் ஊடுருவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  சினூக் ரக போர் ஹெலிகாப்டர்கள் … Read more

'பயங்கரவாதத்திற்கு என் மனைவி, மகன்களை இழந்தேன்' – ஐ.நா.வில் நீதி கேட்ட மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர்

நியூயார்க்: உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் முதல் மாநாடு ஐ.நா.வில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர் கரம்பீர் கங் நீதி கோரி ஆற்றிய நெகிழ்ச்சியான உரை உலகின் மூலைமுடுக்குகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி 10 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், தாஜ் ஹோட்டல் என 10 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் … Read more

கடலில் தத்தளிக்கும் நபர்களை காப்பாற்ற ரோபோக்கள்… விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் முன்னோட்டம்

ஆந்திராவில் கடலில் மூழ்கும் மக்களை காப்பாற்ற LIFEBOUY ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் இதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இந்த ரோபோக்கள் கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்ற உதவும் என்றும், தங்கள் கடற்கரையை பாதுகாப்பானதாக மாற்ற LIFEBOUY ரோபோக்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் லட்சுமிஷா தெரிவித்துள்ளார்.  Source link