டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.

உ.பி. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பி உடலை கைகளில் தூக்கி சென்ற சிறுவன்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால், இறந்த 2 வயது தம்பியின் உடலை 10 வயது சிறுவன் கைகளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது. உ.பி.யின் முசாபர்நகர் அருகில் உள்ள மாவட்டம் பாக்பத். இந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இரண்டாவது மனைவியுடன் வாழ்கிறார் பிரவீண் குமார். கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 வயது குழந்தை கலா குமாரை வளர்க்கும் பொறுப்பு பிரவீணின் இரண்டாவது மனைவிக்கு வந்துள்ளது. … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டை எதிர்த்து சசி தரூர் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சசி தரூர் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30 … Read more

NEET UG 2022: நீட் விடைக்குறிப்பு இன்று வெளியீடு

நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு: தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று தாவது ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் யுஜி 2022) விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பட்டதாரி (நீட் யுஜி 2022) தேர்வு ஜூலை 17 அன்று … Read more

ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் பறிபோன உயிர்.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாததால் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார். கோழிக்கோடு அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடம் போராடி கதவை உடைத்த பொதுமக்கள், நோயாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source link

முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் அணை!: 10 மதகுகளிலும் தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சி..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4 லட்சம் என கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஆந்திராவில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஸ்ரீசைலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தனது முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீசைலம் அணையின் 10 மதகுகளும் 15 அடி வரை உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு … Read more

பாஜக-வால் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு சிக்கலா? இன்று நடக்கிறது நம்பிக்கை கோரும் தீர்மானம்!

டெல்லி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியை கலைக்க பாரதிய ஜனதா சதி செய்வதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் 2 ஆவது நாளாக சமீபத்தில் கூடியது. அப்போது பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் … Read more

பாஜகவில் இணைந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் – தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிர்ச்சி

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நடத்த ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக தெலங்கானா … Read more

மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளை.!

ராஜஸ்தானில் மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 5 பேரை கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உதய்பூரின் பிரதாப் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வங்கி அதிகாரிகளை தாக்கினர். பின்னர், லாக்கரில் இருந்து 23 கிலோ தங்க நகைகளையும், 11 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source … Read more

உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும் என தலைமை நீதிபதி யு.யு. லலித் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் அரசியல் சாசன அமர்வுகள் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.