மணீஷ் சிசோடியாவுக்கு இறுகும் பிடி – வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். “சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என, மணீஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சராக இருப்பவர், மணீஷ் சிசோடியா. இவர், ஆட்சியிலும், கட்சியிலும் நம்பர் 2 இடத்தில் இருப்பவர். டெல்லி மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. … Read more