தொலைதூர கல்வி பட்டமும் கல்லூரி பட்டமும் இனி சமம்: யுஜிசி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: படிப்பை பாதியில் நிறுத்தி விட்டவர்கள், வேலை செய்து கொண்டே படிக்க நினைப்பவர்களுக்கு திறந்தவெளி, தொலைதுார கல்வி முறைகள், ஆன்லைன் கல்விகள் உதவியாக இருக்கின்றன. ஆனால், இவற்றால் வழங்கப்படும் பட்டங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. வேலை வாய்ப்பில் இந்த பட்டங்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவது இல்லை. இனிமேல், இந்த குறை ஏற்படாத நிலை உருவாகி இருக்கிறது. பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று கூறுகையில், ‘‘திறந்த வெளி மற்றும் தொலைதுார கல்வி … Read more

நேதாஜி சிலை வடிக்க பல்வேறு சவால்களை சந்தித்த பிறகு தெலங்கானாவிலிருந்து டெல்லி வந்த 280 டன் கிரானைட்

புதுடெல்லி: டெல்லியின் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கடமை பாதையில் (கர்தவ்யா) நேற்று முன்தினம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்தச் சிலை உருவானதன் பின்னணியில் உள்ள பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலை அமைக்கும் பணி ‘கிரானைட் ஸ்டுடியோ இந்தியா’ என்ற தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. அவர்கள் சிலை அமைத்த தகவல் குறித்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சகத்திடம் விரிவாக கூறியுள்ளனர். நேதாஜியின் சிலை அமைக்க … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு திரும்பப்பெற வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு திரும்பப்பெற வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை எழுந்துள்ளது. 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோஹினூர் வைரம் கடைசியாக 1813-ம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவில் இருந்து திருடப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ள 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்டு இந்திய அரசு … Read more

15க்குள் கியூட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி: இந்த கல்வியாண்டு முதல் கியூட் (cute) என்ற பொது  நுழைவுத் தேர்வு மூலமாக, ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 44  ஒன்றிய பல்கலைக் கழகங்கள், 12 மாநில பல்கலைக் கழகங்கள் உட்பட மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் இந்த தேர்வு மூலமே  சேர்க்கை நடத்தப்படுகிறது.  இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் பல்கலைக் கழக … Read more

லோன் ஆப்களின் பினாமி வங்கி கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி: சட்ட விரோத கடன் செயலிகள் மீது   நடவடிக்கை எடுக்க ஒன்றிய நிதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இது போன்ற சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கை வலுத்து வந்தன. இந்நிலையில்,  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில்,  சட்ட விரோத கடன் செயலிகளை தடை செய்ய … Read more

பொதுவாழ்வில் கடைபிடித்த கண்ணியத்துக்காக நினைவுகூரப்படுவார் – ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: 70 ஆண்டுகள், 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கியத் திருப்புமுனைகளைக் கண்ட ஓர் ஆட்சிக்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது பொது வாழ்க்கையில் கடைபிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்டகாலம் நினைவுகூரப்படுவார். … Read more

கர்நாடகா அரசு பள்ளியில் புல்லா சரக்கு அடிச்சிட்டு பாடம் நடத்திய ஆசிரியை: மேஜை டிராயரில் மது பாட்டில்கள்

துமகூரு: பள்ளியில் மது அருந்தியபடி மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூருவில் உள்ளது சிக்க சாரங்கி அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 25 ஆண்டுகளாக கங்கலக்‌ஷம்மா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் சமீப காலமாக தனிப்பட்ட பிரச்னையால் பள்ளிக்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடமும் நடத்தியுள்ளார்.  இந்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு சென்றது. இதையடுத்து … Read more

அமெரிக்காவில் சிம்-டிரே இல்லாமல் ‘ஐ-போன் 14’ விற்கப்படுவதால் அதனை இந்தியாவில் பயன்படுத்துவதில் சிக்கல்

அமெரிக்காவில், ஆப்பிள் ஐபோன் 14, இ-சிம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சிம்-டிரே இல்லாமல் விற்கப்படுவதால் அங்கிருந்து அதனை வாங்கி வந்து இந்தியாவில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை விட அமெரிக்காவில் குறைவான விலைக்கு ஐ-போன்கள் கிடைப்பதால் பலர் அங்குள்ள உறவினர்கள் மூலம் அவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி வந்தனர். அமெரிக்காவில் விற்கப்படும் ஐ-போன்களில் இ-சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அங்கிருந்து அவற்றை வாங்கி வந்து தங்கள் சிம் கார்டை இ-சிம் ஆக மாற்றி பயன்படுத்த வேண்டும். … Read more

பல மாநிலங்களை ஏமாற்றியது மழை இந்தாண்டு அரிசி உற்பத்தி 1.20 கோடி டன் குறையும்: குருணை ஏற்றுமதிக்கும் தடை

புதுடெல்லி: இந்தாண்டு காரீப் பருவத்தின் போது அரிசி உற்பத்தி ஒரு  கோடியே 20 லட்சம் டன் குறையும்,’ என்று ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்தார். ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே நேற்று கூறுகையில், ‘இந்தாண்டு காரீப் பருவத்தில் பல மாநிலங்களில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் 38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1 கோடி டன் முதல் 1 கோடியே 20 லட்சம் டன் வரை அரிசி … Read more

2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பிரதமரின் காசநோயற்ற பாரதம் என்ற செயலியை தொடங்கி வைத்து பாராட்டி பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘ஒரு நலத்திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் பல மடங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. நாட்டில் நோயுற்று இறப்பவர்களில் பெரும்பாலானோர் காசநோயால் இறக்கின்றனர். உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். வரும் … Read more